இடுக்கி நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
landslide, Rajamala, Idukki, Kerala, death toll

இடுக்கி: இடுக்கி நிலச்சரிவில், இன்று(ஆக.,12) மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியில் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், கனமழை காரணமாக ஆக.,07 அன்று அதிகாலை 4:30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த பலர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.


latest tamil news


நேற்று வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்து 6 நாட்கள் ஆன நிலையில், மண்ணுக்குள் புதைந்திருக்கும் 15 பேரை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. இன்று வானிலை சாதகமாக இருந்ததால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஆக-202021:34:33 IST Report Abuse
Sriram V Why Kerala government did not take precautions? TN communists are keeping quiet
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X