பொது செய்தி

இந்தியா

லடாக் எல்லையை கண்காணிக்கும் ஹெச்.ஏ.எல் ஹெலிகாப்டர்கள்..!

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டர்கள், குறுகிய நேரத்தில் உயர்ந்த மலைச்சிகரங்கள் உள்ள லடாக் அடுத்த லே பகுதியில் பறந்து, எல்லையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.latest tamil newsபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பிரதமர் மோடியின் கனவு திட்டமான'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தில் முக்கிய பங்கை பிரதிபலிக்கும் வகையில், இந்திய ராணுவத்தின் தனித் துவமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக , வடிவமைத்து உருவாக்கிய உலகின் மிக இலகுவான தாக்குதல் ஹெலிகாப்டர் இது என ஹெச்.ஏ.எல் தலைமை நிர்வாக இயக்குனர் ஆர் மாதவன் தெரிவித்தார்.

ஹெச்.ஏ.எல் பயிற்சி விமானி, ஓய்வு பெற்ற விங் கமாண்டர் சுபாஷ் பி ஜான் ஆகியோருடன் விமானப் பணியாளர் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா, சமீபத்தில் ஒரு உயரமான இடத்திலிருந்து ஒரு முன்னோக்கி பகுதிக்கு சென்று, ஒரு உயரமான இலக்கை குறிவைத்து தாக்குல் நடத்த இயக்கினர். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் மிகவும் சவாலான ஹெலிபேட் தளத்தில் தரையிறங்கியது. தீவிர வெப்பநிலை நிலவும் இடங்களில் விரைவாக செல்லும் திறனை ஹெச்.ஏ.எல் ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக நிரூபித்தது. எல்.சி.எச் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது.


latest tamil newsஅதன் அதிநவீன அமைப்புகள் பகல் அல்லது இரவு என எதுவாக இருந்தாலும் எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை. இலகுரக ஹெலிகாப்டர்களின் வேறு முக்கிய அம்சங்களில், முழுமையான பொறுப்பு பகுதி (ஏஓஆர்) மற்றும் உயரங்களில் பறக்கும் திறன் ஆகியவை அடங்கும். பல்வேறு நிலைகளில், அதிக உயரத்தில் போதுமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இவையனைத்தும் மிகவும் வெப்பமான மற்றும் உயரமான இடத்தில் நடக்கும் ஆபரேஷன் நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்துக்கு 160 இலகு ரக ஹெலிகாப்டர்கள் தேவைப் படுகிறது. ராணுவ கொள்முதல் கவுன்சில், 15 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. 15 ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான முன்மொழுவு கோரிக்கையை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஹெச்.ஏ எல் கூறுகையில், தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் விலை பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆர்டர் விரைவில் வருமென எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Bangalore,இந்தியா
13-ஆக-202000:38:48 IST Report Abuse
sam Government need to bring more private companies, Kaveri engine , Drone fighter, Tejas M2, AMCA are long pending with DRDO and HAL.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஆக-202023:28:35 IST Report Abuse
தல புராணம்அம்பானி, அதானி மட்டும் தான்.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஆக-202022:49:51 IST Report Abuse
தல புராணம் லடாக் எல்லையை கண்காணிக்கும் ஹெச்.ஏ.எல் ஹெலிகாப்டர்கள்.. ஆஹா, அப்போ அந்த லட்சம் கோடி ரபேலு எங்கே போச்சு ??
Rate this:
Cancel
12-ஆக-202021:37:32 IST Report Abuse
ஆப்பு நம்ப முடியலியே... நேரு காலத்தைய கம்பெனிய நல்லதுன்னு ஒத்துக்கிறாங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X