பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா உயிரிழப்பு விவகாரம்: பெற்றோரிடமிருந்து டி.என்.ஏ., பெற நடவடிக்கை

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020
Share
Advertisement

கோவை: கோவையில் உயிரிழந்தது இலங்கை தாதாவா என்பதை உறுதி செய்ய, அவரது பெற்றோரின் டி.என்.ஏ., மாதிரிகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



latest tamil news




இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில், பிரதீப் சிங் என்ற பெயரில், கடந்த 2018 முதல் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூலை 4ம் தேதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news



கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்காவா என்பதை உறுதி செய்ய, உயிரிழந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அங்கொட லொக்காவின் உறவினர்களின் டி.என்.ஏ., உடன் ஒப்பிட்டு பார்த்து அவரது உயிரிழப்பை உறுதி செய்ய போலீசார் திட்டமிடப்பட்டது. இதையடுத்து இலங்கையில் உள்ள அங்கொட லொக்காவின் தாய் சந்திரிகா பெரேரா, தந்தை லயனால் பெரேராவிடம் இருந்து டி.என்.ஏ., பரிசோதனைக்காக ரத்தமாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவரது பெற்றோரிடம் இருந்து பெறப்படும் டி.என்.ஏ.,வை ஒப்பிடும் போது, 99 சதவீதம் துல்லியத்தன்மை கிடைக்கும். மரபணுக்கள் பெறப்பட்ட பின் இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் வழங்கலாம் அல்லது சென்னையில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை துாதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், கடந்த, 2014ம் ஆண்டு இலங்கை போலீசார் அங்கொட லொக்காவை கைது செய்த போது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் பிரதியும் டி.என்.ஏ., மாதிரிகளுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன் மூலமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


மூன்று நாட்கள் 'கஸ்டடி'


அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் (சி.ஜே.எம்.,) மனுதாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார் மூவரையும் மூன்று நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின் சி.பி.சி.ஐ.டி.. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X