சாப்பிட சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் அலட்சியத்தால் குழந்தை பலி

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஓடிசா : மதிய உணவு சாப்பிடஆம்புலன்ஸ் டிரைவர் 90 நிமிடங்கள் எடுத்து கொண்டதன் விளைவால் குழந்தையின் உயிர் பலியானது.latest tamil newsஒடிசாவின் மயூர் பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினரின் ஒரு வயது மகனுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பாரிபாடா நகரில் உள்ள பிஎம் ஆர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையில்சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கட்டாக் நகரில் உள்ள எஸ்.பி.சி., மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் கடந்த திங்கட்கிழமை பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து பெற்றோர் தங்கள் மகனுடன் ஆம்புலன்சில்கட்டாக் நகருக்கு புறப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தபா எனப்படும் சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருந்தாளுனர்களும் சாப்பிட சென்றனர். விரைவில் வந்து விடுவதாகவும் பெற்றோரிடம் உறுதி அளித்தனர்.


latest tamil newsசுமார் 90நிமிடங்களில் சாப்பிட்டு முடித்த பின்னர் ஆம்புலன்ஸ் கட்டாக் நகரை நோக்கிபுறப்பட்டது. பாரிபாடாவில் இருந்து புறப்படும் போதே குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததாகவும் 10 கி.மீ தொலைவில் இருந்த கிருஷ்ணசந்திரபூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் டிரைவரும் மருந்தாளுனரும் மதிய உணவிற்கு நீண்ட நேரம் எடுத்து கொண்டிருக்காமல் இருந்திருந்தால் எனது மருமகன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என குழந்தையின் தாய்மாமா கூறினார். தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆம்புலன் டிரைவர் மற்றும் மருந்தாளுனரை தாக்கினர். கிருஷ்ணசந்திரபூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதனிடையே 108 ஆம்புலன்சை இயக்கி வரும் தனியார் ஹெல்த் ஹேர் நிறுவனவத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆம்புலன்ஸ் டிரைவரின் தாமதம் குறித்து மறுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஆக-202001:39:31 IST Report Abuse
தமிழ்வேல் எதெல்லாம் செய்யவேண்டும், எதெது செய்யக்கூடாது என்று வரைமுறைப் படுத்த வேண்டும்.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்அவரவர் மனசாட்சிப்படி நடந்து கொள்ள முடியாதா? யாராவது கட்டளை சட்டம் போட்டு கங்காணி சாட்டையுடன் கூடவே வரவேண்டுமோ? அப்போதுதான் சர்க்கஸ் விலங்குகள் போல ஆடுவீர்களோ? விபத்து எங்கு எப்போது நடந்தாலும் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக ஆஜராவதும் மீட்புப்பணி இரண்டு மூன்றுநாள் நடந்தாலும் வேலையை மேற்பார்வை செய்வதோடு ஊழியர்களுக்கு உணவு குடிநீர் வேளாவேளைக்கு உரிய நேரத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாலும் நான் சாப்பிட்டு தான் பார்த்ததில்லை என்று எனக்கும் மேலதிகாரி ஒருநாள் ஸ்பாட்டிலேயே சொன்னாரே அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அவார்ட் என்பேன்...
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஆக-202014:51:22 IST Report Abuse
தமிழ்வேல் அப்படியல்ல, வரைமுறைப் படுத்தினால்தான் மனசாட்சி இல்லாதவர்களும் தவறு நடக்கும் பட்சத்தில் சட்டத்திற்கு பதில் கூற நேரிடும். சுகாதாரத் துறை அதற்குத்தான் இருக்கின்றது....
Rate this:
Cancel
12-ஆக-202022:11:58 IST Report Abuse
மதுமிதா வயிறைப் பற்றி கவலைப் படுபவருக்கு உயிரைப் பற்றி எதற்கு கவலை. மனிதம்?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஆக-202014:53:45 IST Report Abuse
தமிழ்வேல் இவர்கள், வண்டிகளில் தண்ணீர் வைத்துக்கொள்வதுபோல அவசரத்திற்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும்....
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஆக-202021:11:43 IST Report Abuse
A.George Alphonse இவர்களே சமைத்து சாப்பிட்டுவிட்டு வந்தது போல் சுமார் ஒன்னரை மணிநேரம் எடுத்து கொண்டார்கள் போலும்.சரியான போஜன பிரியர்கள்.தண்டிக்க படவேண்டிய வர்கள்.இதயமற்ற பிறவிகள். னாரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X