இன்று(ஆக.13) சச்சின்- அசோக் கெலாட் நேரில் சந்தித்து பேச்சு

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
  Ashok Gehlot, Sachin Pilot "Reunion" Tomorrow? First Meet After Revolt


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் நாளை , முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சச்சின் பைலட் அசோக் கெலாட்டிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன் காங். எம்.பி.ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து சச்சின் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் சச்சின் ஜெயப்பூர் திரும்பினார்.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளார்.
இதையடுத்து இன்று சச்சின் பைலட்டும், முதல்வர் அசோக் கெலாட்டும் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 30 நாட்களுக்கு மேல் நடந்துவந்த அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-202017:45:49 IST Report Abuse
Malick Raja ஆப்பு ..
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
13-ஆக-202011:52:06 IST Report Abuse
mathimandhiri அதாகப் பட்டது,... இப்படியாகத் தானே நாட்டில் உள்ள 138 கோடி ஜென்மங்களை வெறும் அட்டைகளாக நினைத்து ஆடப் பட்ட வெளியேற்றம் நாடகத்தில் கதா நாயகன் பல்டி மற்றும் அந்தர் பல்டியெல்லாம் அடித்து விட்டு கட்டக் கடேசில இத்தாலி காஷ்மீர் கூட்டணி பராக்ரமசாலிகளால் தூக்கி அடிக்கப் பட்டு இருப்பிடத்திற்கே வந்து சேந்துட்டார். இதனால் சர்வ அட்டைகளுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் பணம்,பலம், சூது இவையே வெல்லும்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202009:31:51 IST Report Abuse
SAPERE AUDE இந்த கூத்து இன்றோடு முடியுமா?"திண்ணையிலே படுத்து உறங்கியவனை எழுப்பி சாப்பாடு தீர்ந்து விட்டது தூங்கப்பா" என்ற பழமொழி போல எவருக்கும் உதவாத ஒருசெய்தியை பத்திரிகைகள் மிகைப்படுத்தி கடைசியில் இது வெறும் வெத்து வேட்டு என்று உதறிவிட்டன...!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X