பொது செய்தி

இந்தியா

சிசேரியன் செய்து கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றிய மிசோரம் எம்.எல்.ஏ.,

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Mizoram MLA, operates, pregnant woman, deliver baby

கவுகாத்தி: பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டாக்டர் விடுப்பில் சென்ற தகவலறிந்த மிசோரம் எம்.எல்.ஏ., தியாம்சங்கா, விரைந்து சென்று சிசேரியன் செய்து கர்ப்பிணி உயிரை காப்பாற்றினார். எம்.எல்.ஏ., 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவராக இருந்தவர்.

மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்திலுள்ள நகுர் எனும் பகுதியை சேர்ந்த கர்ப்பிணியான லால்மங்காய்சாங்கி என்பவர், பிரசவ வலி ஏற்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பணியிலிருந்து டாக்டர், உடல் நலக்குறைவால் விடுப்பில் சென்றிருக்கிறார். விஷயம் அறிந்த சம்பாய் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தியாம்சங்கா, உடனடியாக மருத்துவமனை விரைந்துள்ளார்.


latest tamil news


30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேரு மருத்துவராக இருந்து பின் எம்.எல்.ஏ., ஆனவர் தியாம்சங்கா. துரிதமாக செயல்பட்ட அவர், ரத்துபோக்கு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு, சிசேரியன் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., தியாம்சங்கா கூறியதாவது: நான் அங்கு சென்றபோது, உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்ப்பிணி இருந்தார். இதனால் அவருக்கு சிசேரியன் செய்ய வேண்டிய நிலை உருவானது. நல்ல வேளை நான் அருகில் இருந்தேன். இது கடவுளின் திட்டம். அப்பெண் மட்டுமல்ல நானும் அதிர்ஷ்டசாலி தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஆக-202010:20:03 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan please dont mention only MLA - mention DR MLA ..
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
13-ஆக-202013:03:01 IST Report Abuse
dina தாய் குழந்தை இருவரையும் காப்பாற்றிய அவர் கடவுளுக்கு சமம் ,
Rate this:
Cancel
alagar - chennai,இந்தியா
13-ஆக-202009:26:10 IST Report Abuse
alagar சூப்பர் சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X