10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க மாடர்னா நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
moderna, america, agreement, 10 crore injections, மாடர்னா, அமெரிக்கா, ஒப்பந்தம், 10 கோடி தடுப்பூசி மருந்துகள்

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்திடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

மாடர்னா நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி mRNA-1273 ஏற்கனவே இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது. இதையடுத்து சுமார் 11,400 கோடி ரூபாய் செலவில் 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க அந்நிறுவனத்திடம் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

நபர் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போட சுமார் ரூ 2,300 செலவு ஆகும் என மாடர்னா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆய்வுக்காக மாடர்னா நிறுவனத்திற்கு அமெரிக்கா ஏற்கனவே ரூ 19,000 கோடி நிதி உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அமெரிக்கா திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர ஜான்சன் அன்ட் ஜான்சன், ஆஸ்ட்ராஜெனகா, பயோஎன்டெக்சனோபி, கிளாக்ஸோ ஆகிய நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்காக அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களிடம் 10 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற 195 கோடி அமெரிக்க டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திடம் 10 கோடி மருந்துகளுக்காக 100 கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்ய உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-ஆக-202006:06:14 IST Report Abuse
NicoleThomson எல்லாம் சரி மக்களுக்கு வேறு சிக்கல் வராம பார்த்துக்கோங்க , கொரோனாவை பரப்பிய கம்யூனிஸ்ட் நாடு வேறொரு வைரஸை வெளியிட்டா என்ன செய்வீங்க
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஆக-202001:30:24 IST Report Abuse
தமிழ்வேல் இந்தியாவுக்கு கிடைக்குமா இந்த ஆர்டர் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X