பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவது அவசியம் ; அமைச்சர் கே.டி ராமாராவ்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவது அவசியம் என அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் வலியுறுத்தினார்.



latest tamil news



தெலுங்கானா அரசு விவசாயம், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி மாநிலத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்கிறது. இதனால் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் தெலுங்கானா முக்கியமானதாக உருவாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்தவும் மாநில அரசு வலியுறுத்துவதாக அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்தார். பிரகதிபவனில் இன்று தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் தலைமையில் பல்வேறு அமைச்சர்கள் குழு, தேவையான வழிகாட்டுதல்களை தயாரிப்பதுடன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாடங்கள் கொள்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் கே.டி ராமாராவ் கூறுகையில், உணவு பதப்படுத்தும் தொழிற்துறையை ஊக்குவிக்க உணவு பதப்படுத்தும் கொள்கை மற்றும் தளவாடக் கொள்கை அவசியமானது. இது விவசாயிகளின் நிதி வலுவூட்டல் மற்றும் மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும். அமைச்சர்கள் குழு இந்த கொள்கைகளை மற்ற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளால் வழங்கப்படும் சலுகைகளுடன் ஆய்வு செய்துள்ளது. மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.


latest tamil news



தெலுங்கானாவில் முதல்வர் ராவ் எடுத்த நடவடிக்கைகளையொட்டி, கிருஷ்ணா மற்றும் கோதாவரி உள்ளிட்ட நதிகளின் கீழ் லட்சம் ஏக்கர் புதிதாக சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் ஒவ்வொரு கிராமங்கள், மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள், விவசாய நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு மாநிலம்முழுவதும் மேப்பிங் செய்யப்படுகின்றன. புதிய நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், சாகுபடி பரப்பளவை அதிகரித்ததாலும், தெலுங்கானா உருவாக்கத்திற்கு பிறகு, குறிப்பாக நெல், பருத்தி, மக்காச்சோளம், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.

அத்துடன் செம்மறி ஆடு மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களால், ஆடுகளின் எண்ணிக்கையிலும் மீன் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நீர் புரட்சியை மறு ஆய்வு செய்து வருவதால், மற்றொரு பசுமைப் புரட்சிக்கு (வேளாண்மை) சாட்சியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நீல புரட்சி (மீன்வளம்), இளஞ்சிவப்பு புரட்சி (இறைச்சி உற்பத்தி) மற்றும் வெள்ளை புரட்சி (பால்) ஆகியவற்றைக் காணும். பயிர் உற்பத்தியில் அதிகரிப்பு அரசு கண்டிருந்தாலும், அவற்றை முழுமையாக செயலாக்கும் திறன் எங்களிடம் இல்லை. உணவு பதப்படுத்தும் தொழிற்துறையை ஊக்குவிக்க அவசர தேவை உள்ளது. இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X