பொது செய்தி

இந்தியா

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.100 கோடி

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.100 கோடி

புதுடில்லி :ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பேருக்கு, 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த திட்டத்தின்கீழ், ஒரு வியாபாரிக்கு, அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.அதை, ஓராண்டுக்குள் அவர்கள் திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகளைத் தவிர வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் சாலையோர வியாயாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு, ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதில், ஒரு லட்சம் வியாபாரிகளுக்கு, கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
13-ஆக-202011:47:00 IST Report Abuse
Vivekanandan Mahalingam நிறைய வாசகர்கள் இன்னும் திமுக காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் இருக்கிறா மாதிரி நினைத்து ஊழல் கமெண்ட் போடறாங்க . உண்மை க்கு புறம்பான கமெண்ட்ஸ்
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
13-ஆக-202011:31:08 IST Report Abuse
Vivekanandan Mahalingam இந்த திட்டம் வங்கி மூலமாக பயனாளிக்கு கொடுக்க படுகிறது . ரேஷன் கடையில் பணம் கொடுப்பது போல் இல்லை . கமெண்ட் போடறவங்க உண்மையை தெரிந்து போட வேண்டும். மக்களை திசை திரும்புவதை நிறுத்தி உருப்பட வழி பாருங்கள் . இப்போதெல்லாம் முத்ரா வந்த பிறகு ஒவ்வொரு பயனளிக்கும் வங்கி மூலமாக்கத்தின் பணம் கொடுக்க படுகிறது
Rate this:
Cancel
Maharajan - Bangalore,இந்தியா
13-ஆக-202010:58:07 IST Report Abuse
Maharajan 100 கோடி தெருக்கோடி போவதில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X