அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை!

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை; 'இனியும், அ.தி.மு.க., அரசை நம்பியிருக்காமல், கொரோனாவில் இருந்து தப்பிக்க, சுயபாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனாவைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தான் ஓரே தீர்வு என, அ.தி.மு.க., அரசு கூறியது. ஆனால், மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு காலம், ஆக., மாதத்தை நெருங்கிய பின், கொரோனா பாதிப்பு குறையவில்லை; கூடி வருகிறது.

அப்படியானால், ஆட்சியாளர்களுக்கு ஊரடங்கு சட்டங்களை கூட, ஒழுங்காக அமல்படுத்த தெரியவில்லை; அதற்குக் கூட தகுதி இல்லாதவர்கள். பள்ளி, கல்லுாரிகள், பொதுப் போக்குவரத்து, கோவில்கள் தவிர, எல்லாம் செயல்பட அனுமதித்து விட்டு, இதை ஊரடங்கு என சொல்வதை போல கேலிக்கூத்து இருக்க முடியாது. அவர்கள் கண்ட பலன். இவ்வளவுக்கு பின்னும், கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு, ஊரடங்கு, மருந்துகள், உபகரணங்கள் எதையும் முறையாகப் பயன்படுத்தும் சக்தியை இழந்து விட்ட, கோமா நிலையை, அ.தி.மு.க., அரசு அடைந்து விட்டது. அனைத்திலும் தோல்வி அடைந்து விட்ட அரசை, இனியும் நம்பியிருக்காமல், கொரோனாவில் இருந்து தப்பிக்க, சுயபாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அது, ஒன்று தான் உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழக வளர்ச்சியில், இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இளைஞர்களின் தீவிரமான பங்களிப்பிற்கும், அயராது உழைக்கும் வலிமைக்கும், என்றும் தளராத உற்சாகத்திற்கும், இந்த சர்வதேச இளைஞர் தினத்தன்று, என் பாராட்டுகள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
15-ஆக-202022:10:18 IST Report Abuse
Tamilselvan இளைஞர்களின் பங்கு இந்தியாவிற்கு மிகவும் தேவை. தங்கள் சுயநலத்திற்காக,மொழி இனம், சமூக நீதி,மத சார்பின்மை என்று பேசி மக்களை ஏமாற்றி இவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைத்து உத்தமர் போல உலா வரும் போலி அரசியல்வாதிகளை இனியும் நம்ப கூடாது. பல லட்சம் கோடி கொள்ளை அடித்து விட்டு உத்தமர் போல அடையாளம் காட்டுவர். மத சார்பினமை என்று பேசி,அனைத்து மதத்தினரையும் மதிக்காமல் இந்துக்களை மட்டும் இழிவாக பேசும்,இந்த புரட்டு அரசியல் வியாதிகளை நம்ப மாட்டார்கள். பதவிக்கு வந்து கொள்ளை அடிக்க துடிக்கும்,இந்த புரட்டு அரசியவாதிகளை இனம் கண்டு, வரும் தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும்.கோடி கோடி கொட்டி பதவிக்கு வந்து சுருட்ட துடிக்கும் இவர்களை நம்பாமல், சுயநலம் இல்லாதவர்களை தேர்ந்து எடுத்து கலாம் கண்ட வல்லரசை இளைஞர்கள் உருவாக்க சமுதாய புரட்சி செய்ய வேண்டும். விரைவில் அது நடக்கும்.
Rate this:
Cancel
B.KESAVAN - chennai,இந்தியா
14-ஆக-202020:28:47 IST Report Abuse
B.KESAVAN ஒரு சில்லறை விற்பனை காய்கரி கடையில் கூட காய் வாங்கும்போது தரமானதாக பொருக்கி பொருக்கி தேர்ந்து எடுக்கிறார்கள் மக்கள், இந்த மக்களுக்காக சேவை செய்ய வரும் அரசியல்வாதிகளை அவர்களின் தகுதி, நேர்மை, ஒழுக்கம், நாட்டுப்பற்று என ஏதாவது இருக்கிறதா என்று அறியாமலே அவர்களை மக்கள்பிரதிநிதிகளாக தேர்ந்து எடுக்கிறார்கள், நம்மை யாராவது ஒரு நூறு ரூபாய் ஏமாற்றியது தெரிந்தால் எவ்வளவு கோபம் வருகிறது,ஆனால் நாட்டையே சூறையாடும் இவர்களை எப்படி மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுக்கிறார்கள்.மக்களும் சுயநலமாக செயல்படுகிறார்களா?. ஒரே பண்பாடு கலாச்சாரமாக இருந்த மக்களை இனமாகவும், குழுக்களாகவும் பிரித்து கயவர்கள் வெற்றியடைந்து விடுகிறார்கள்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14-ஆக-202005:08:00 IST Report Abuse
NicoleThomson மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அரசை நம்பாமல் கேடுகெட்ட குடும்பங்கள் நடத்தும் தரமற்ற ஊடகங்களை நம்ப சொல்றீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X