அரசியல் செய்தி

தமிழ்நாடு

யார் தலைமையில் கூட்டணி? பா.ஜ., - அதிமுக., மோதல்!

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
BJP, ADMK, alliance, கூட்டணி, அதிமுக, பாஜ, மோதல்

அ.தி.மு.க., -- பா.ஜ., இடையே, வரும் சட்டசபை தேர்தலில், யார் தலைமையில் கூட்டணி என, மோதல் ஏற்பட்டு இருப்பது, அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.

தி.மு.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ள, வி.பி.துரைசாமி, நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., என்ற நிலை முன்பிருந்தது. தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,வான கு.க.செல்வம், பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்த பின், தி.மு.க.,- - பா.ஜ., என, அரசியல் களம் மாறியுள்ளது. இது, எங்கள் வளர்ச்சியை காட்டுகிறது.

நாங்கள் யார் பக்கம் இருக்கிறோமோ, அந்த கூட்டணி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தேசிய கட்சியாக இருப்பதால், எங்கள் கட்சி தலைமையில், கூட்டணி அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, கே.பி.முனுசாமி கூறியதாவது: நீண்ட காலமாக, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது, அ.தி.மு.க., தான். தமிழகத்தை முதன்மை மாநிலமாக, அ.தி.மு.க., தலைவர்கள் மாற்றினர்.அவர்கள் வழியில், தற்போது, அவர்களின் தொண்டர்கள் சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர். தேர்தல் களத்தை, எங்கள் தலைமையில் சந்திப்போம். தேசிய கட்சியான, பா.ஜ., லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தது. அப்போது, வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''பா.ஜ., தலைமையில் கூட்டணி என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. ''அவர் கூறினால், அ.தி.மு.க., தரப்பில், பதில் அளிப்போம். நிர்வாகிகள் கூறுவதை, கட்சி கருத்தாக கூற முடியாது,'' என்றார்.


ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார்


பா.ஜ., மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மக்களை ஏமாற்ற, கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் ஜாதியினருக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வில், அதிக சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது, முற்றிலும் கற்பனையான கடிதம். அரசியல் செய்வதற்காக, இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., தேர்வு முடிவுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு, 909; பிற்படுத்தப்பட்டோருக்கு, 925 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் கூறியது, உண்மைக்கு மாறானது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு, 907; பிற்படுத்தப்பட்டோருக்கு, 735; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 706 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, இடஒதுக்கீடு கொள்கையில் தலையிடவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
13-ஆக-202019:55:17 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இங்கே சிலருக்கு பார்லிமென்டில் வாங்கிய அடி ஊராட்சியில் வாங்கிய உதை என்னவோ விக்கவேண்டியதாம் ஏன் இடை தேர்தல் விக்கிரவாண்டி அம்மா டெபாசிட் கூட வாங்கவில்லை ஆகவே இடை தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் என்று தான் வரும்
Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
13-ஆக-202021:50:24 IST Report Abuse
Santhosh Gopalபாராளுமன்றத்தில் சுடலைக்காக போட்ட ஒட்டு இல்லை, சுடலைக்காக போட்ட ஒட்டு என்றால் வேலூர் தொகுதியில் எங்கே போனது உங்களின் லட்ச கணக்கான ஒட்டு வித்யாசம்? மேலும் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும்// அப்படியா? அப்படி என்றால் RK நகர் தொகுதியில் ஏன் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது? உங்கள் சித்தாந்தத்தின் படி 22 தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திலும் ஆளும் கட்சி தானே வெற்றி பெற வேண்டும்? உள்ளாட்சி தேர்தலில் கூட அதிமுக அதிக வாக்கு வித்யாசம். 53 சதவிகிதம் அதிமுக, 47 சதவிகிதம் திமுக. கொங்கு மண்டலம் வாஷ் அவுட். தென் தமிழ்நாடும் அவுட்டு. சென்னை டெல்டா தான் கைகொடுத்தது. சீட் படி பார்த்தல் இரண்டு கட்சியும் சம பலமே.... இதில் எங்கிருந்து திமுகவிற்கு வெற்றி? திமுகவிற்கு சொல்லி கொள்ளும் படி வெற்றி எது என்றால் பாராளுமன்ற தேர்தல் தான், அதுவும் பப்புவா அல்லது மோடியா என்று ஒட்டு போட்டார்கள். பாஜக இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கண்டது தோல்வி முகம் தான். வேலூர் தொகுதியில் கூட முஸ்லிம்களின் புண்ணியத்தால் சொற்பம் நாக்கு தள்ளி எட்டு ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் கரை என்ற முடிந்தது. என்னிடம் அரசியல் வாதம் வேண்டாம்.........
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-202016:33:06 IST Report Abuse
Rafi பிஜேபியுடன் போட்டிபோடும் நிலைக்கு கட்சியை பாதாளத்திற்கு கொண்டுசென்ற பெருமை எடப்பாடி, மற்றும் பன்னீர் செல்வத்திற்கே.
Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
13-ஆக-202018:21:48 IST Report Abuse
Santhosh Gopalகட்சியை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் எடப்பாடி கிட்ட போட்டியிட்டு தோற்றுபோன உங்க சுடலையை என்னத்த சொல்ல? விக்கிரவாண்டி, நான்குனேரியை பார்த்தால் எடப்பாடி கட்சியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றதை போல தெரியவில்லையே பாய்....உங்களுக்கு அப்படி தெரிகிறதா பாய்? கருப்பு கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்க பாய், அப்புறம் உண்மை நிலவரம் புரியும். மேலும் கலைஞர் தொலைக்காட்சியை மட்டுமே பார்த்தல் அப்படி தான் தெரியும்....
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
13-ஆக-202019:52:19 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உங்கள் 22 MLA க்களை 13 தொகுதி DMK வென்றதே அது என்ன பொய்யா ஏன் ஊராட்சியில் உங்கள் அம்மா அப்பா இருந்த காலத்தை விட அதிகம் தொகுதி எப்படி பெறமுடிந்தது சொல்லுவியா...
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
13-ஆக-202014:29:55 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் என்னை கேட்டல் DMK / ADMK கோப தனங்களை மறந்து 117/117 என்று போட்டி இட்டு இந்த சங்கிகளை எப்படி வாமன அவதாரம் எடுத்து பூமிக்குள் புதைத்தார்களோ அப்படி இவர்களை வதம் செய்து இதோடு அவர்களை காலி செய்யணும்
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
13-ஆக-202021:21:54 IST Report Abuse
naadodi"வாமன அவதாரம் எடுத்து பூமிக்குள் புதைத்தார்களோ"-உளரக் கூடாது..வாமன அவதாரம் பற்றி தெரியாவிட்டால் கருத்தில் அதைக் கொணரவேண்டாம்..இருட்டில் உள்ளவரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X