அன்று அமெரிக்க கப்பலில் பேக்கர்; இன்று மதுரையில் கரும்பு ஜூஸ் மேக்கர்

Added : ஆக 13, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை, :அமெரிக்காவில் டிஷ்னி வேர்ல்டு சொகுசு கப்பலில்பேக்கரி மாஸ்டராக (பேக்கர்) பணியாற்றியமதுரை சூர்யா நகர் சரவணனை கொரோனா ஊரடங்கு கரும்பு ஜூஸ் மேக்கராக மாற்றியுள்ளது.அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளாக பேக்கராக பணியாற்றினேன். விடுமுறையில் ஜன., மதுரை வந்தேன். மார்ச் 31 அமெரிக்கா செல்ல வேண்டியசூழலில் கொரோனா தீவிரமானது. இதனால் நம் நாட்டில் அமலான ஊரடங்கால் அமெரிக்கா செல்ல
அன்று அமெரிக்க கப்பலில் பேக்கர்; இன்று மதுரையில் கரும்பு ஜூஸ் மேக்கர்

மதுரை, :அமெரிக்காவில் டிஷ்னி வேர்ல்டு சொகுசு கப்பலில்பேக்கரி மாஸ்டராக (பேக்கர்) பணியாற்றியமதுரை சூர்யா நகர் சரவணனை கொரோனா ஊரடங்கு கரும்பு ஜூஸ் மேக்கராக மாற்றியுள்ளது.

அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளாக பேக்கராக பணியாற்றினேன். விடுமுறையில் ஜன., மதுரை வந்தேன். மார்ச் 31 அமெரிக்கா செல்ல வேண்டியசூழலில் கொரோனா தீவிரமானது. இதனால் நம் நாட்டில் அமலான ஊரடங்கால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அமெரிக்காவிலும் கொரோனா தீவிரமாக இருந்ததால் அங்குள்ள நிறுவனங்கள் மூடப்பட்டன.

அக்., வரை ஊரடங்கு விதித்து பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சொந்த ஊர் அனுப்பப்பட்டனர். என் பணிக்கான ஒப்பந்தமும் சஸ்பெண்டில் தான் உள்ளது. மே வரை என்ன செய்வதென குழப்பத்தில் இருந்தேன். மனைவி நிஷாந்தியின்தோழி சந்தியாவின் கணவர் செந்துார் திருச்சியில் வண்டிகளில் கரும்பு ஜூஸ் தொழில் செய்வதை அறிந்தேன். அவரை தொடர்பு கொண்டு ஒரு வண்டியை வாங்கி, ஜூனில் மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே கரும்பு ஜூஸ் விற்க ஆரம்பித்தேன்.

ரூ.20 - ரூ.25க்கு லெமன், ஜல்ஜீரா, சாட் மசாலா என 10 வகை கரும்பு ஜூஸ் மற்றும் இட்லி பொடி, நாட்டு சர்க்கரை விற்கிறேன். ஜூஸ் வண்டிக்கு பணம் செலுத்த வங்கி கடன் கேட்டுள்ளேன். கிடைத்தால் அமெரிக்கா செல்ல மாட்டேன். சென்றாலும் இந்த தொழில் தொடரும். பேக்கரி வைக்கும் திட்டமும் உள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தோர் வாழநினைத்தால் வாழலாம் என்பதற்கு நானும் ஒரு உதாரணம், என்றார்.

வாழ்த்த: 90425 08930

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivatsan Krishnamachari - Hyderabad,இந்தியா
14-ஆக-202020:47:36 IST Report Abuse
Srivatsan Krishnamachari நண்பரே, உங்கள் தன்னம்பிக்கைக்கும், உழைப்பிற்கும் ஆண்டவன் நிச்சயமாக அருள் புரிவார். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
14-ஆக-202008:06:19 IST Report Abuse
Viswam கப்பலில் வேலை எப்போதும் நாடாறு மாதம் காடாறுமாதம் ஸ்டைலில் ஓடும். கரை வரும்போது கடலில் உள்ள காலங்களில் கிடைத்த சம்பளம் மொத்தமாக கிடைப்பதால் பெரிய அமெண்டாக தோன்றும். கடலுக்கு திரும்பி போவதற்கு காரணமே கையில் உள்ள காசு சில மாதங்களில் கரைவதனால். அவருக்கு தெரிந்த வட்டாரங்களில் கரும்பு ஜூஸ் விற்கும் நபர் உள்ளதால் இதில் இறங்கிவிட்டார். உலக பொருளாதாரம் படுத்துள்ள நிலையில் திரும்ப போனால் வேலை உண்டா என்பதே தெரியவில்லை . எதாவது ஒரு தொழிலில் இறங்கி இங்கேயே வாழ்வது என கரோனா அவரை திசை திருப்பிவிட்டுள்ளது. முயற்சி திருவினை ஆக்கும். இவரை ஏளனம் செய்யவேண்டாம்.
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
14-ஆக-202019:17:19 IST Report Abuse
R KUMARஇவரது பணியை மனதார பாராட்டுவோம். கையில் உள்ள தொழில் இவரை நிச்சயம் காப்பாற்றும்....
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஆக-202006:31:31 IST Report Abuse
Sanny ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது, ஓடி, ஓடி உழைத்தவர், சும்மாயிருக்க முடியுமா? அதுதான் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார், ஓயமாட்டார். நந்தகோபால் பெங்களூர், Shekar மும்பாய் அவர்களே, இப்பவாவது புரியுதா வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என்று. வெளிநாட்டில் வேலை என்றால் இந்தியாவில் இருந்தே பசி பட்டினி என்று பஞ்சம் பாடி வெளிநாட்டில் வேலை செப்பவர்களின் பணத்தில் சொகுசு வாழ்வு வாழ்பவர்கள் பலர், இவரும் மாட்டிகிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X