கனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (183)
Advertisement
புதுடில்லி : சென்னை விமான நிலைய, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மீது, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி கூறிய குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அதிகாரி மறுத்துள்ளார்.தி.மு.க., -- எம்.பி., கனிமொழி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 'சென்னை விமான நிலையத்தில், ஹிந்தியில் பேசிய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரியிடம், ஹிந்தி
DMK, Kanimozhi, Kanimozhi Karunanidhi, கனிமொழி, குற்றச்சாட்டு, அதிகாரி, மறுப்பு

புதுடில்லி : சென்னை விமான நிலைய, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மீது, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி கூறிய குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அதிகாரி மறுத்துள்ளார்.



தி.மு.க., -- எம்.பி., கனிமொழி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 'சென்னை விமான நிலையத்தில், ஹிந்தியில் பேசிய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரியிடம், ஹிந்தி தெரியாது என கூறினேன்; தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தேன்.


சென்னை விமான நிலையத்தில், தன்னிடம் இந்தியில் பேசிய பாதுகாப்பு படை பெண் அதிகாரியிடம், இந்தி தெரியாது என கூறியதால், நீங்கள் இந்தியர் தானே? என்று அந்த அதிகாரி கேட்டதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியிருந்தார்.

latest tamil news



அதற்கு, நீங்கள் இந்தியரா என, அவர் கேள்வி எழுப்பினார்.'ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து நடைமுறையில் உள்ளது' என, அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியதாவது: பெண் அதிகாரியிடம் நடத்திய விசாரணையின் போது, அவர், கனிமொழியிடம், நீங்கள் இந்தியரா என்ற கேள்வியை கேட்கவில்லை என்றும், ஹிந்தியும் இந்திய அல்லது அதிகாரப்பூர்வ மொழி தானே என்று தெரிவித்ததாக கூறினார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பின், விமான நிலையங்களில், உள்ளூர் மொழி தெரிந்த அதிகாரிகளை, அதிக எண்ணிக்கையில் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (183)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
19-ஆக-202009:48:33 IST Report Abuse
Indian  Ravichandran இன்னும் இந்த அக்காவோட ராவாடி தீரலிய. ஆனாலும் சும்மாசொல்லக்கூடாது அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்துஇருக்கு. என்ன ஒரு ட்ராமா அடேங்கப்பா. இதுக்கு ஹிந்தி காரனுக்கு பத்து சதவீதம் போக தொண்ணுறு சதா வீதம் தமிழ் மாநிலத்தை சேர்ந்தவருக்குத்தான் வேலை கொடுக்கனுமுனு சட்டம் போடச்சொல்லி போராடுன நல்லாயிருக்கும். அத ஒருத்தனும் செய்யமாட்டான்.
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
18-ஆக-202002:18:33 IST Report Abuse
Bharathi உள்ளூர் போலீஸ் பணியில் இருந்த காலத்தில் இந்த கரைவேட்டிகள் பண்ண அராஜகங்கலாலும் அத்துமீறல்களாலும்தான் CISF கொண்டு வரப்பட்டது.
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
17-ஆக-202016:59:09 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் தூத்துகுடிகாரனுக ஹிந்தி தெரிஞ்சவன ஜெயிக்கவெச்சுருந்தா, இந்த பிரச்சினையே வந்துருக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X