பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,633 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமைடைந்தவர்கள் விகிதம் 57 சதவிகதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 7,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,96,494 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 113 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 3,510 ஆக உள்ளது.


latest tamil news



தலைநகர் பெங்களூருவில் மட்டும் நேற்று (ஆக.12) 2,802 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். பெல்லாரி மாவட்டத்தில் புதிதாக 635 பேருக்கும், மைசூருவில் 544 பேருக்கும், பெலகவியில் 314 பேருக்கும், தர்வாத் மாவட்டத்தில் 269 பேருக்கும், உடுப்பி மாவட்டத்தில் 263 பேருக்கும், ஹஸ்ஸான் மாவட்டத்தில் 258 பேருக்கும், தேவன்கெரே மாவட்டத்தில் 239 பேருக்கும், தக்ஷிண கன்னடாவில் 229 பேருக்கும், கோபல் மாவட்டத்தில் 202 பேருக்கும் நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. புதனன்று மட்டும் புதிதாக 26,076 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X