தமிழ்நாடு

சட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்? :தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் பதில்

Added : ஆக 13, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
dmk, tamil nadu, tamil nadu assembly, gutka, gutka scam, சட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்? : தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு பதில்

சென்னை : தடை செய்யப்பட்ட குட்கா, தமிழகத்தில் எளிதில் கிடைப்பதை, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், சட்டசபைக்கு அதை எடுத்து சென்றதாகவும், சபாநாயகரை அவமதிக்கவில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக, தி.மு.க., குற்றம் சாட்டியது. அதை நிரூபிக்கும் விதமாக, சட்டசபைக்குள் குட்காவை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர்.இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது.


latest tamil news




நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதித்தது. இவ்வழக்கு, 2017ம் ஆண்டில் தொடரப்பட்டது.இந்நிலையில், இந்த சட்டசபையின் பதவி காலம், 2021 மே மாதம் முடிய உள்ளதால், வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் முறையிட்டார்.

இதையடுத்து, இவ்வழக்கு, முதல் பெஞ்ச் முன், இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராயினர்.அவர்களின் வாதம் வருமாறு:இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களில், இரு எம்.எல்.ஏ.,க்கள் இறந்து விட்டனர். கு.க.செல்வம் எம்.எல்.ஏ.,வுக்காக, நாங்கள் ஆஜராகவில்லை. உரிமை மீறல் பிரச்னையில், விதிகள் பின்பற்றப்படவில்லை. முன்கூட்டி தீர்மானித்து, உரிமை மீறல் பிரச்னையை எழுப்பி, உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில், கருத்து தெரிவித்ததற்காக, ஸ்டாலினுக்கு எதிராக, துணை சபாநாயகர் அவதுாறு வழக்கு தொடுத்துள்ளார். உரிமைக்குழு தலைவராக இருந்து, அவர் இந்த பிரச்னையை விசாரிக்கக் கூடாது.

தடை செய்யப்பட்ட குட்கா, தமிழகத்தில் எளிதில் கிடைப்பதை, அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில், அதை, சட்டசபைக்கு எடுத்து சென்றனர்.சபாநாயகரை எந்த விதத்திலும் அவமதிப்பு செய்யவில்லை. அதனால், உரிமை மீறலில் ஈடுபடவில்லை. சட்டசபைக்குள் கருத்து தெரிவித்ததற்காக, உரிமை மீறல் பிரச்னை எழுப்ப முடியாது.இந்தப் பிரச்னையை, உரிமைக்குழுவுக்கு அனுப்பாமல், சட்டசபையில் விவாதித்திருக்க வேண்டும். உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது, சட்டவிரோதமானது. இதில், நீதிமன்றம் தலையிட முடியும்.இவ்வாறு, அவர்கள் வாதாடினர்.வழக்கறிஞர்களின் வாதம், இன்றும் தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஆக-202018:34:34 IST Report Abuse
ஆரூர் ரங் நல்ல வேளையா கொலைகள் அதிகமா நடக்குதுன்னு சட்டசபைக்குள்ளேயே நடத்திக்காட்டவில்லை .மற்றபடி சட்டசபை நடவடிக்கைகளில் குறுக்கிடும் அதிகாரம் கோர்டுகளுக்கில்லை.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-ஆக-202012:14:30 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எந்த நம்பர் பெருசுன்னு பாரத்தா திமுக உறுப்பினர்கள் தான் அதிகம் ..பாதிப்பு அவர்களுக்குத்தான் ..அமைதியாய் சொச்சகாலத்தை கழிப்பதே மேல் பல உறுப்பினர்கள் கூட கட்சிதாவப்போறதாக கூட பேச்சு அடிபடுகிறது
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஆக-202012:14:13 IST Report Abuse
தமிழ்வேல் இதற்கெல்லாம் ஒரு வழக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X