பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக 16 லட்சம் கருவி

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020
Share
Advertisement
TN Corona Updates, TN Health, TN Fights Corona, Corona, TN Against Corona, TN Govt, coronavirus, Tamil Nadu, Covid 19

சென்னை : கொரோனா பரிசோதனை செய்ய, தமிழக அரசு கூடுதலாக, 15.80 லட்சம், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கொள்முதல் செய்ய உள்ளது.

தமிழகத்தில், தினமும், 60 - 70 ஆயிரம் வரை, கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில், சென்னையில், 12 - 14 ஆயிரம் பரிசோதனைகளும், மற்றவை, பிற மாவட்டங்களிலும் செய்யப்படுகின்றன.தற்போது வரை, 33.60 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா சோதனைக்காக, தமிழக அரசு தொடர்ந்து, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது.

முதல் கட்டமாக, தென்கொரியா நிறுவனத்திடமிருந்து, 25 லட்சம் கருவிகள் வாங்க, ஜூலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், தென்கொரியாவில் இருந்து, 7 லட்சம்; ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து, தலா, ஒரு லட்சம்; இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் கருவிகளையும், தமிழக அரசு வாங்கி உள்ளது.


latest tamil news


இந்நிலையில், கூடுதலாக, 15.80 லட்சம் கருவிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இதன்படி, தென்கொரியாவில், 12 லட்சம்; அமெரிக்காவில், 1.3 லட்சம்; பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில், தலா ஒரு லட்சம்; இந்திய நிறுவனத்திடம், 50 ஆயிரம் கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

'இதுவரை, 3.72 லட்சம் கருவிகள், தமிழகத்திற்கு வந்துள்ளன. மீதமுள்ள கருவிகள், மூன்று வாரங்களில் வரும். தற்போது, அரசிடம், 7.45 லட்சம் கருவிகள் கையிருப்பில் உள்ளன' என, தமிழக மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X