அரசியல் செய்தி

தமிழ்நாடு

'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு'

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (86)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

திருப்பூர் : 'விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்போம்' என ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நாளை தொண்டர்கள், காப்பு கட்டி கொள்ளும் நிகழ்ச்சி, பகுதி வாரியாக சமூக இடைவெளியுடன் நடக்கிறது.


latest tamil news


விரதத்தை துவங்கும் தொண்டர்கள், 22ம் தேதி, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, எளிமையாகவும், சமூக இடைவெளியுடனும் கொண்டாடுவர். கொரோனா ஒழிய வேண்டும், மக்களும் நாடும் சுபிட்சமடைய வேண்டும் என்பதே, இந்தாண்டு பிரார்த்தனை.

சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்குமாறு, தி.மு.க, தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்க உள்ளோம். மற்ற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் அவர், விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
17-ஆக-202022:31:07 IST Report Abuse
vns இந்து முன்னணி விழாக்களில் மக்கள் திரண்டு வந்து பங்கேற்று எல்லா விழாக்களையும் மிகப் பெரிய வெற்றிக் கொண்டாட்டங்களாக மாற்ற வேண்டும். தமிழர்கள் இதை அவசியம் செய்வார்கள் என்று நம்புவோம்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202008:48:47 IST Report Abuse
Matt P சாமி முன்னாடி மறந்து போஇய் திருநீறு பூசிட்டு மறந்து போச்சே என்று அழிக்க மாட்டாரே,
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202005:29:33 IST Report Abuse
meenakshisundaram 'vinaayakar ' தமிழா கடவுளான்னு திருமா கேட்பான் ,ஆமாம் அவ்வையார் கூட பாடினார் .மறந்துடாதீங்க ஸ்டாலின் சும்மா கும்பிட்டு .வாழ்த்துங்க அது போல எந்த ப்ராமணனாவது விநாயகன் என்று பெயர் வைத்துள்ளனரான்னும் கேட்பான் . உங்க அப்பா முக இருந்தால் விநாயகர் வட இந்தியாவிலிருந்து தானே வந்துள்ளார் ?அவர் தென்னக கடவுளே இல்லைன்னு சொல்லுவாரு .கனி மொழியும் அவர் 'வாதாபி' கணபதின்னு வரலாறை சொல்லுவார் ஜாக்கிரதை -வடக்கு வாழ்கிறது .ஹிந்தி யை எதிர்ப்போம் ஹிந்தி கடவுளையும் எதிர்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X