விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு'

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (86)
Share
திருப்பூர் : 'விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்போம்' என ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நாளை தொண்டர்கள், காப்பு கட்டி கொள்ளும் நிகழ்ச்சி, பகுதி வாரியாக சமூக இடைவெளியுடன்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

திருப்பூர் : 'விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்போம்' என ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நாளை தொண்டர்கள், காப்பு கட்டி கொள்ளும் நிகழ்ச்சி, பகுதி வாரியாக சமூக இடைவெளியுடன் நடக்கிறது.


latest tamil news


விரதத்தை துவங்கும் தொண்டர்கள், 22ம் தேதி, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, எளிமையாகவும், சமூக இடைவெளியுடனும் கொண்டாடுவர். கொரோனா ஒழிய வேண்டும், மக்களும் நாடும் சுபிட்சமடைய வேண்டும் என்பதே, இந்தாண்டு பிரார்த்தனை.

சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்குமாறு, தி.மு.க, தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்க உள்ளோம். மற்ற பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் அவர், விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X