பொது செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
உடல் உறுப்பு, தானம், தமிழகம், முதலிடம், TN, Tamil nadu, donate organs, TN CM, Palaniswami, ORGAN DONATION, தமிழ்நாடு

சென்னை: 'மக்கள் அனைவரும், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஆக.,13), சர்வதேச உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துசெய்தி: இந்தியாவிலே முதன் முதலாக, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற, முன்னோடி அமைப்பை, 2014 டிச., 12ல், ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சையில், முன்னோடி மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில், இதுவரை, 1,382 கொடையாளர்களிடம் இருந்து, 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.


latest tamil news



உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தொடர்ந்து, ஐந்தாவது முறையாக, தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. மூளைத்தண்டு சாவு அடைந்தவரின், உறுப்புகளை தானம் செய்தால், எட்டு நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும்.எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை, மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202012:41:07 IST Report Abuse
இராமன் அப்பாடா , ஒரு நல்ல செய்தி.
Rate this:
Cancel
13-ஆக-202010:12:15 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு குறிப்பிட்ட மதத்தில் இறந்த உடல் உறுப்புக்களை நீக்கினால் மறுமையில் பிரச்னை வரும். மறுபடி சுரக்கும் ரத்ததானம் மட்டும் கொடுங்கன்னு மதப் பிரசாரம் பண்றாங்க . அவங்க மார்க்க அக்குபஞ்சர் ஆளுங்காளோ உறுப்பு தானம் கார்பொரேட் ஆஸ்பத்திரி சதின்னு பொய்ப் பிரச்சாரம் பண்றாங்க . வாக்கு வங்கிக்கு பயந்து அதிமுக அரசு கைது செய்வதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X