பொது செய்தி

இந்தியா

பிரணாப் முகர்ஜி உயிருடன் உள்ளார்: மகன் தகவல்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், அவர் உயிருடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சோதனையில் அவர் கொரோனா வைரசால்
Pranab Mukherjee, Pranab Mukherjee son, Pranab Mukherjee coronavirus, covid 19, president Pranab Mukherjee, பிரணாப், பிரணாப் முகர்ஜி, உடல்நிலை, அபிஜித் முகர்ஜி, கவலைக்கிடம், கொரோனா, ராணுவ மருத்துவமனை,

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், அவர் உயிருடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சோதனையில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அது குறித்த ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இருந்தது.ஆனால், அதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.


latest tamil newsபிரணாப் மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு:எனது தந்தை உயிருடன் உள்ளார். கற்பனை மற்றும் பொய் செய்திகள் சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்புவதாக தெரிவித்துள்ளார்.பிரணாப் மகள் ஷர்மிஸ்தாவும், பிரணாப் குறித்த வதந்தியை மறுத்துள்ளார்.
ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathilingam - Chidambaram,இந்தியா
13-ஆக-202019:21:46 IST Report Abuse
Pasupathilingam எந்த ஒரு செய்திக்கும் கேலியாகவும் கேவலமாகவும் கற்பனை கலந்து செய்தியாகவும் துன்பம் தரும் செய்திகளைக்கூட வக்கிரமான கமெண்ட்டாகவும் தற்காலத்து சமூக ஊடகங்களில் பலரும் பகிர்கின்றனர். படிப்பறிவில்லாத பாமரர்கள் படிப்பறிவில்லாதவர்கள் இப்படி செய்வதில்லை அவர்களுக்கு தெரியவும் தெரியாது. சமூக ஊடகங்களை கையாளும் அறிவார்ந்தவர்கள்தான் பலர் இம்மாதிரி நடந்து கொள்கின்றனர். இம்மாதிரி செயல்களால் பிறருக்கு பாதிப்பு வருமா வராதா என்று அறியாதவர்களா என்ன. எனோ இப்படி ஒரு வக்கிர மனநிலை வளர்ந்து வருகிறது. இதனால் எந்த ஒரு செய்தியையும் உண்மையில்லை என்று நினைக்கவே தோன்றுகிறது.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
13-ஆக-202018:17:31 IST Report Abuse
Indian  Ravichandran இறைவன் உங்களுக்கு பூரண நலம் கொடுக்க பிரதிக்கிறோம் முன்னாள் ஜனாதிபதி அவர்களே.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-202010:17:07 IST Report Abuse
Malick Raja இவர் நல்லவர் ...வல்லவர் .. ரொம்ப ரொம்ப நல்லவர் . "மக்கள்நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார் தன்மக்கள் நலம் ஒன்றேதான் மனதில்கொள்ளுவார் " இதற்க்கு மிகவும் பொருத்தமானவர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X