சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

இப்போதே ஏன் விவாதங்களை ஏற்படுத்துகிறீர்கள்?

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
இப்போதே ஏன் விவாதங்களை ஏற்படுத்துகிறீர்கள்?

முதல்வர் இ.பி.எஸ்., தான் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்து விட்டு, களத்தில் சந்திப்போம்; இ.பி.எஸ்.,சை முன்னிறுத்தி, தளம் அமைப்போம்.


'சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன; இப்போதே ஏன், வீண் விவாதங்களை ஏற்படுத்துகிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை.மூணாறு நிலச்சரிவில் இறந்த, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, தொழிலாளர் குடும்பங்களுக்கு, தமிழக அரசு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும். கல்வி உதவி, அரசு வேலைவாய்ப்பு, உதவித்தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'தமிழகத்தை தாண்டி, பிற இடங்களுக்கு வேலைக்கு செல்லும், அப்பாவி தமிழர்கள் நிலையை, அவ்வப்போதாவது அரசியல் கட்சிகள் கண்காணித்து, உதவிகள் செய்ய வேண்டும்...' என, அறிவுரை கூறத்தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை.புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் துவங்குவதை எளிதாக்குகிறது. மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து, வளர்ச்சி பற்றி பேசுகிறது. நாடு முழுக்க, கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news

'வரைவுக்கே, கோலம் மூலம் எதிர்ப்பு என்றால், சட்டமாக வந்த பின், கறுப்புக்கொடி தானா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை.மத்திய, பா.ஜ., அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது, பாரா முகத்துடன் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால், சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய, பொதுவுடைமை கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சியிலும், அதுபோல் நிகழ்கிறதோ?


'இறந்தது, மலையாளிகள் என்றால், அம்மாநில முதல்வர், பாரபட்சமாக நடந்து கொண்டிருக்க மாட்டார்...' என, சொல்ல வருகிறீர்களா என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, அமைச்சர்கள் மாறி மாறி கருத்து சொல்வதன் மூலம், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன; அனைவரும் சேர்ந்து தான், இரட்டை தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைமையிடம் கலந்து, ஆலோசித்து கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.


'தேர்தல் வரப் போகிறது; தங்கள் பெயர், மக்களுக்கு தெரிய வேண்டும்; விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், அமைச்சர்களுக்கு வராதா என்ன...' என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
13-ஆக-202018:54:52 IST Report Abuse
Raj அனைவரும் வாஸ் அவுட் அகப்போவுது பொறுத்திருந்து பார்ப்போம்
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) கனியக்கா ஸ்படிக மாலையெல்லாம் போட்டிருக்கு... தீவிர சிவ பக்தை போலிருக்கு... பகுத்தறிவுக்கு பங்கம் வந்துவிடாதோ...
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
13-ஆக-202011:46:42 IST Report Abuse
Santhosh Gopal எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர். ஓ.பி.எஸ் தான் துனை முதல்வர். இதில் எந்த மாற்றமும் இருக்காது. எடப்பாடி தலைமையில் பல தேர்தல்கள் சந்தித்துள்ளது அதிமுக அதில் பாராளுமன்றம் நீங்கலாக அனைத்திலும் வெற்றி ஆனால் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு தேர்தல் கூட சந்தித்ததில்லை. எடப்பாடி ஆட்சி செய்யும் விதத்தை மக்கள் பார்த்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கட்டுமரத்திற்கு பிறகு அதிக நாட்கள் முதல்வர் என்ற அந்தஸ்தை பெறுகிறார் எடப்பாடி ஆனால் ஓ.பி.ஸ் இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்தார். எடப்பாடி அவரின் திறமையை பல முறை நிரூபித்துள்ளார். பல இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை ஒருங்கிணைத்து, அனைவரையும் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து திறமையை நிரூபித்துள்ளார். இந்த எதார்த்தம் ஓ.பி.ஸ் க்கு நன்றாக தெரியும். அதனால் முதல்வர் வேட்பாளர் என்று ரிஸ்க் எடுக்க மாட்டார். எடப்பாடி கட்சியை பூஜ்யம் என்ற நிலையில் இருந்து அனைத்திலும் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்தவர். மேலும் சாணக்கியதனமும் உள்ளது. எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்கு தெரிந்தவர். தேர்தல் நெருங்க நெருங்க அனைவரும் எடப்பாடி தலைமையில் வந்து விடுவார்கள். நான் கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதால் அனைவரும் அவரின் பின்னால் செல்வர் என்று எண்ணிணேன் ஆனால் அதையும் சமாளித்து கழகத்தை வெற்றி பெற வைத்தவர் அதனால் தான் கூறுகிறேன். ஓ.பி.எஸ் அவரே ஒதுங்கி கொள்வார்
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
13-ஆக-202019:57:33 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்கோபால் தில் இருந்தா குமாரை இந்த வார்த்தை சொல்ல சொல்லு கோபால் பார்க்கலாம் இருக்கு உங்களுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X