பொது செய்தி

இந்தியா

உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: மோடி

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Pm Modi, narendra modi, nirmala sitharaman, நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி, நரேந்திர மோடி, வரிவிதிப்பு

புதுடில்லி: உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil newsநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில், 'வெளிப்படையான வரி விதிப்பு நேர்மையானவரை கவுரவித்தல்' என்ற திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.


latest tamil news


இந்த திட்டத்தை துவக்கி வைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: புதிய திட்டம் வெளிப்படைத்தன்மை உள்ளதாக இருக்கும்.ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தலாம் வரி செலுத்துவோருக்கு அதிகாரமளித்தல், வெளிப்படையான அமைப்பை உருவாக்குதல், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமரின் கொள்கையாக இருக்கும். இதனை உணர்ந்து, மத்திய நேரடி வரி வாரியம் திட்டத்தை உருவாக்கி, மக்களுக்காக வைத்துள்ளது. வரி செலுத்துபவர்கள், ரீபண்ட் பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
*நேர்மையாளரை பெருமைபடுத்தும் திட்டம் செப்., முதல் அமல்
*நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிப்பது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
*வரி முறையை எளிமைபடுத்துவதன் மூலம் புதிதாக வரி செலுத்துபவர்களை அதிகரிக்க முடியும்
*வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக எளிமையானதாக இருக்க வேண்டும்
*வரி சலுகைக்கு குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் முன்னேற்றம் காண முடியாது.
*நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மத்திய அரசின் வரி முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்
*நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்ற வரி வசூல் மிக முக்கியம்.
*வரி விதிப்பில் செய்யப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது
*உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்
*மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைகிறது.
*வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
*நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்
*நாட்டு மக்களின் வாழ்க்கையில் இருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய படியாகும்.
*இது இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியாகும்.
*கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.
*சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன.
*மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்கும் பெரும் முயற்சி. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஆக-202000:47:11 IST Report Abuse
g.s,rajan The Government is very much torturing the Middle class who are paying the various taxes genuinely including the Income tax ,It is generally crushing the Middle class monthly salaried people which is totally ridiculous and illogical. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Thanigai Arasu - Trichy ,இந்தியா
13-ஆக-202021:19:10 IST Report Abuse
Thanigai Arasu It seems so far no transparent tem of taxation exists. BJP took 6 years to bring transparent in taxation
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-202020:05:43 IST Report Abuse
Krishnamurthy Venkatesan உரிய வரி செலுத்தியபின் ரீபண்ட் ஏன் தரவேண்டும். ரீபண்ட் முறை ஒழிப்பதுபோல் வரி சட்டம் மாற்றி அமைக்க படவேண்டும். லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X