பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Gold, silver, Gold rate, silver rate, gold price

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் சவரன் ரூ.2,248 சரிந்த நிலையில் இன்று(ஆக.,13) சவரன் மேலும் ரூ.224 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.5,076க்கும், சவரன் ரூ.224 குறைந்து ரூ.40,608, 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.53,300க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.76.40ஆக விற்பனையானது.


latest tamil news




கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறதொழில்களில் காணப்பட்ட மந்த நிலையால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்தனர். இதனால் தங்கம் விலை கிடு கிடுவென வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து, அதிகபட்சமாக சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் சற்று குறைந்து வருவதாலும் பிற தொழில்கள் மெல்ல மீண்டு வருவதால் என்னவோ தங்கத்தின் மீதான முதலீடும் சற்று குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
13-ஆக-202018:43:56 IST Report Abuse
Raj தங்கத்தை நாம் வெறுக்க வேண்டும் அப்போதுதான் நம் தொழில் துறையில் முதலீடு பெருகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X