பொது செய்தி

இந்தியா

ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் விளம்பரத்துக்கு சீனர்கள் எதிர்ப்பு; கிளம்பியது சர்ச்சை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Romantic Cartier, Romantic Cartier Advertisement, China, ஓரினச்சேர்க்கை, விளம்பரம், சர்ச்சை, எதிர்ப்பு

பெய்ஜிங்: கார்டியர் (Cartier) என்ற பிரஞ்சு தங்கநகை நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் கிளையைப் பரப்பி உள்ளது. சீனாவிலும் இந்த நகை கடையின் கிளைகள் உள்ளன. இந்த நகை கடை சமீபத்தில் ஓர் விளம்பரத்தை வெளியிட்டது. இது ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த சர்ச்சையை சீனாவில் மீண்டும் எழுப்பியுள்ளது.

உலகம் முழுவதும் எல்ஜிபிடிக்யூ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என அவர்கள் அந்தந்த நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். தற்போது உள்ள விஞ்ஞான யுகத்தில் இவர்களது கோரிக்கையும் பல நாட்டு அரசுகளால் ஏற்கப்பட்டு வருகிறது.

சீனாவில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் சமூகத்தில் மற்ற குடிமக்களோடு இணைந்து பாகுபாடின்றி வாழ சீன அரசு வழிவகை செய்தது. 2001-ஆம் ஆண்டுக்கு முன்னர் சீனாவில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் இருந்தார்கள். ஓரினச்சேர்க்கையை அமைப்பினரின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த சட்டம் நீக்கப்பட்டு அவர்கள் ஒன்றாக வாழ அனுமதி வழங்கப்பட்டது.


latest tamil news


ஆனாலும் தொடர்ந்து சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கையாளர்கள் பொதுமக்களால் ஒடுக்கப்பட்ட வருகின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீனாவில் ஒளிபரப்பாகியது. ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு இதற்கு சீன கம்யூனிச அரசு இந்நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. எந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், டிவி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரித்து படம் எடுக்கக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டது.

மேலும் தனியார் நிறுவன விளம்பரங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்கக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது கார்டியர் நகைக்கடை நிறுவனம் ஒரு நிமிடத்துக்கு ஓர் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் இந்த நகை கடையின் மோதிரத்தை அணிந்து சைக்கிளில் செல்கின்றனர்.


latest tamil news


இவர்கள் இருவரும் தந்தை-மகன்போல அந்த விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விளம்பரம் வெளியான சில நிமிடங்களிலேயே டுவிட்டரில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியது. இவர்களைப் பார்த்தால் தந்தை-மகன் போன்று இல்லை. இவர்கள் அணிந்திருப்பது கபில் ரிங் எனப்படும் தம்பதிகள் அணியும் ஒன்று போல் அணிந்து இருக்கும் மோதிரங்கள் கபுள் ரிங். ஆக, இந்த நகைக்கடை நிறுவனம் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறது என சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்றது. இது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அதே சமயத்தில் டுவிட்டரில் இந்த விளம்பரத்திற்கு 5,000 லைக்குகளும் 1,200 கமெண்டுகளும் வந்துள்ளன. ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் பலர் இந்த விளம்பரத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சீனா விதித்த கட்டுப்பாட்டை மீறி இந்த விளம்பரம் வெளியாகி இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் சில சீனர்கள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
13-ஆக-202017:44:41 IST Report Abuse
vnatarajan விவசாயத்தில் இயற்கை உங்களைவிட்டு கெமிக்கல் கலந்த செயற்கை உரத்தை உபயோகப்படுத்துவதால் தற்போது வின்னாநிகல் மண் வளமே கெட்டுப்போகிறது என்று கூறுகிறார்கள் அதேபோலத்தான் ஒரு கால கட்டத்தில் இயற்கைஅல்லாத செயார்க்கையான ஓரினச்சேக்கையும் மனித குலத்தை அழித்துவிடும்
Rate this:
Cancel
AkbarAntony - Chennai,இந்தியா
13-ஆக-202016:31:05 IST Report Abuse
AkbarAntony ஓரினச்சேர்க்கை மகா பாவம், அது கொரோனா போல ஏதாவது நோயை கிளப்பிவிடப்போகிறது. ஓரினசேர்கையாளர்கள் மனிதர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
13-ஆக-202015:55:00 IST Report Abuse
shyamnats சாதாரணமாக கடந்து போக முடியாது.இந்திய உச்ச நீதி மன்றமே ஆதரவாக கடந்த வருடம் தீர்ப்பு கொடுத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X