அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,விலிருந்து கு.க. செல்வம் நீக்கம்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
DMK, DMK MLA, KK Selvam, dismissed, tamil nadu, தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், கு.க.செல்வம், செல்வம், ஸ்டாலின்

சென்னை: தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளார்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம். இவர் சமீபத்தில் தமிழக பா.ஜ., தலைவர் முருகனுடன் டில்லி சென்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தி.மு.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கட்சியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு செல்வமும் விளக்கம் அளித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இந்த காரணத்தினால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
14-ஆக-202008:37:54 IST Report Abuse
arudra1951 இவன் போனால் என்ன இவன் கழகம் போனால் என்ன குவித்யா முழுகிப்போய் விடும் விடுங்கப்பா
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஆக-202003:17:30 IST Report Abuse
Ramesh R முடிந்த பின் கழுவி விட வேண்டும் .........
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
13-ஆக-202021:06:43 IST Report Abuse
Tamilnesan ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் இருந்து ஒரு ஊழியர் வெளியே வந்து விட்டார். அண்ணா, கழகமே ஒரு குடும்பம் என்பதை மாற்றி குடும்பங்களே ஒரு கழகம் என்றாக்கி விட்டார் முத்தமிழ் வித்தவர். இனி இது தொடர்கதையாக வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X