'இணைந்தே செயல்படுவோம்': நேபாளத்திடம் அழுத்தமாகக் கூறிய சீனா

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

பீஜிங்: 'சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டு, முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என, சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




இந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வரைபடத்தை மாற்றியமைத்து இந்தியாவை கோபப்படுத்தியதோடு, 'ராமர் தங்களது நாட்டில் பிறந்தவர்' என, சர்ச்சைக்குரிய கருத்தையும் கூறி பெரும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் 'சீனாவும் நேபாளமும் இணைந்து செயல்பட வேண்டும்' என, சீன தரப்பு கூறியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



latest tamil news



சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, 13வது சுற்று ராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது, லூவோ ஜாவோ ஹுய் கூறியதாவது:
கடந்த ஆண்டு நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை, இருநாடுகளும் மிகுந்த கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை இணைந்து செயல்படுத்த வேண்டும். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' என்ற சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
முக்கியமான விவகாரங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



சீனாவின் பல 'பில்லியன் டாலர் பெல்ட்' சாலை திட்டம் திபெத் வழியாக டிரான்ஸ் இமயமலை பிராந்திய இணைப்பை நோக்கமாக கொண்டது. சீனாவின் திட்டங்களில், திபெத்தின் ஜிலாங் முதல் காத்மாண்டு வரையிலான சாலையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல், நேபாளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைத்தல், நேபாளத்தின் மூன்று காரிடார்கள் அமைப்பது உள்ளிட்டவை அடங்கும். இந்த திட்டங்களுக்காக, சீனாவுக்கு நேபாளம் ஆதரவு அளித்து வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் கரகோரம் ஹைவே என்ற பெயரில் பொருளாதார காரிடார் சாலை திட்டத்தை செயல்படுத்துகிறது சீனா. இதேபோல், நேபாளத்திலும் சாலை முதலீடுகளை செய்கிறது. பாகிஸ்தானை போலவே, சீனாவுடன் நட்பு பாராட்டி நெருக்கம் காட்டி வருகிறது நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
13-ஆக-202022:44:16 IST Report Abuse
G.Kirubakaran கேட்ட எண்ணம் கொண்டவர்களால் ,எதையும் சாதிக்க முடியாது
Rate this:
Cancel
வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா
13-ஆக-202019:47:58 IST Report Abuse
வாரணம் ஆயிரம் எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகளில் பாக்கிஸ்தான் நேபாளம் உள்ளடக்கிய அகண்ட பாரதம் உறுதி .
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
13-ஆக-202018:58:42 IST Report Abuse
Madhav இந்த திட்டங்களால் நேபாளம் வளர்ந்தால், உபி மபி பீகார் மக்கள் நேபாளம் சென்று வேலை பார்ப்பார்கள். தென்னிந்திய வருவது குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X