அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் யார்? கே.பி.முனுசாமி பதில்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
அதிமுக, கே.பி.முனுசாமி, பாஜ, பா.ஜ., கூட்டணி,

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அதிமுக.,வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சர்களும், ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


இதன் பின்னர் கே.பி.முனுசாமி கூறியதாவது: முதல்வர் வேட்பாளர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் தான் பா.ஜ., தொடர்கிறது. பார்லிமென்ட் தேர்தலை அ.தி.மு.க., தலைமையில் தான் சந்தித்தோம். அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம் என பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். ஆதாயத்திற்காக பா.ஜ.,விற்கு சென்ற துரைசாமி கருத்திற்கு பதில் சொல்ல முடியாது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே அ.தி.மு.க., துவங்கிவிட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
14-ஆக-202008:36:49 IST Report Abuse
arudra1951 இனிமேல் திராவிட காட்சிகள் பதவிக்கு வருவது சந்தேகம்தான்
Rate this:
Cancel
யார்மனிதன் - Toronto,கனடா
13-ஆக-202021:46:37 IST Report Abuse
யார்மனிதன் ஆம் வெற்றி பெரும் வரை இப்படி சொல்வோம் அப்பரும் முதல்வர் ஆகா வேட்டியா கிழிச்சுக்குட்டு சண்டைபோடுவம்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202017:44:06 IST Report Abuse
Visu Iyer சரி.. சின்னம்மா எப்போ வருவாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X