ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா| Ram Temple trust head tests covid positive | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்த ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி
Ram Temple, ram janma bhoomi Trust Head, coronavirus, PM modi, narendra Modi, Ayodhya, ராமர் கோயில், அறக்கட்டளை தலைவர், கொரோனா, பாதிப்பு, அயோத்தி, மோடி, பிரதமர்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்த ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாஸ் என 5 பேர் மட்டுமே மேடையில் அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


இந்நிலையில் மகான்த் நிரித்ய கோபால் தாஸ்க்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேடையில் அவருடன் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், வளாகத்திலிருந்த மதகுருக்களில் ஒருவருக்கும், 14 காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X