பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Ganesh Chaturthi, Ganesh Chaturthi 2020, Ganesh Chaturthi festival, coronavirus, chennai news, விநாயகர் சதுர்த்தி, சிலை, ஊர்வலம், தமிழக அரசு, தடை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் அன்று கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாவை தவிர்க்கவும் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைாக தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்துவிழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ , அச்சிலைகளை நீர்நிலைளில் கரைப்பதோ , தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அனுமதிக்கப்படுகிறது.


latest tamil news



மேலும், பண்டிகை கொண்டாட தேவையன பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திட வேண்டும் . அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சிறி கோவில்களில் பொது மக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய, திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொது மக்களும் திருக்கோவில் நிர்வாகமும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டு தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
13-ஆக-202019:18:29 IST Report Abuse
Varun Ramesh கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். சித்த வைத்தியம் மற்றும் கை வைத்தியத்தை நோக்கி திரும்புக என்பதுதான்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
13-ஆக-202017:54:50 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, இந்தியாவில் பெரிய கோவில் சிறிய கோவில் திருப்பதி கோயில் பத்மநாபசாமி கோயில் பெரும்பாலும் கிராமங்களில் இருக்கும் குலதெய்வக்கோயில் எது சிறிய கோயில் எது பெரிய கோயில் என்று தெரியவில்லை ஏதோ பெரிய கோயிலோ சிறிய கோயிலோ மூடப்பட்டிருக்கும் திறக்கப்பட்டிருக்கும்னு சொல்லியிருக்காங்க வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது பெரிய மற்றும் சிறிய கோயில்களில் கூட்டம்கூடி சாமி கும்பிடுவதால் வைரஸ் நோய் பரவல் நிற்பதாகத்தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202017:52:25 IST Report Abuse
Visu Iyer விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அனுமதிக்கப்படுகிறது./// வீடுகளில் கொண்டாட கூட அனுமதி வாங்கணுமா? மாஸ்க் மட்டும் போதுமா.. கடையில் கூட்டம் வந்தால் பரவாயில்லையா.. ஆறு அடி இடைவெளி விடும் அளவுக்கு இடமே இல்லையே.. சென்னையை விரிவு படுத்த நிலத்தை கையக படுத்துவங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X