(பரபரப்பான கிசுகிசுப்பான சுறுசுறுப்பான குறுகுறுப்பான அரசியல் துணுக்குகள் இப்பகுதியில் இடம்பெறும்)
‛ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு தீபாவும், அவருடைய சகோதரர் தீபக் தான்' என, ஐகோர்ட் தீர்ப்பு சொன்ன பின், தீபா, அதிரடியா பல வேலைகளை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க...
வீட்டுல எப்பப் பார்த்தாலும், வழக்கறிஞர்கள் கூட்டமும் ஆலோசனையுமாத்தான் இருக்கு. ஜெ.,வின் கோடிக்கணக்கான சொத்துக்களை மீட்டெடுக்கும் முயற்சியில தீபா தீவிரமா இருக்காங்க... அவரை மறுபடியும் தீவிர அரசியலுக்கு இழுத்துட்டு வர சிலர் முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க!
கொதிக்கும் தாசில்தார்கள்!

தமிழகத்துல சீனியர் தாசில்தார்கள், 169 பேர் துணை ஆட்சியர்களா பதிவு உயர்வு பெற, இரண்டு வருஷத்துக்கும் மேலா காத்துட்டு இருக்காங்க... தனிப்பட்ட முறையிலும், சங்கம் மூலமும் பதவி உயர்வுக்கு, அமைச்சரையும் செயலரையும் அணுகினாங்க...
ஐந்து லட்சம் கொடுத்தா, உடனடியா பணியாணை வழங்கப்படும்னு, வாய்மொழி உறுதி மொழி வந்ததால், நேர்மையான தாசில்தார்கள் வருத்தத்துல இருக்காங்க. பதவி உயர்வு, வேண்டிய பணியிடம்னு, இரண்டிலும் பணத்தை அள்ள வருவாய் துறை வலை விரிச்சிட்டு காத்திருக்கிறதா கொதிக்கிறாங்க. முதல்வர் தலையிட்டால் தான், பிரச்னை தீரும்னு சொல்றாங்க
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE