'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த தயார்': பிலிப்பைன்ஸ் அதிபர்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020
Share
Advertisement

மணிலா: 'ரஷ்யா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த தயார்' என, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.



latest tamil news




உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான 'கிளினிக்கல்' பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.


latest tamil news



இந்த சூழலில் உகிலேயே முதல்நாடாக கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். ஆனால், 'ரஷ்யாவின் தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இல்லை. முறையாகப் பரிசோதிக்கப்படாமல் உள்ளது' என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறுகையில், ''ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன். நான் ரஷ்யாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். ரஷ்யாவின் தடுப்பு மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நாங்கள் தயார்,'' என்றார்.

மேலும், 'ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு, முதலில் என்னையே நான் உட்படுத்துவேன்' எனவும் டியுடெர்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X