மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சி; வைரலாகும் வீடியோ

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி, மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.உலகின் பல இடங்களில் ஆச்சரியப்படும் வகையில் இயற்கை அமைந்திருக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ள ராயல் தேசிய பூங்காவானது இயற்கையின் மடியில் வீற்றிருக்கிறது. இங்குள்ள பசுமையான மரங்களும், இதமான தென்றலும், பறவைகள்,
Reverse Waterfalls, waterfall, Viral Video, நீர்வீழ்ச்சி, ஆச்சரியம், ஆஸ்திரேலியா, வைரல் வீடியோ

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி, மேல்நோக்கி செல்லும் அற்புத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

உலகின் பல இடங்களில் ஆச்சரியப்படும் வகையில் இயற்கை அமைந்திருக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ள ராயல் தேசிய பூங்காவானது இயற்கையின் மடியில் வீற்றிருக்கிறது. இங்குள்ள பசுமையான மரங்களும், இதமான தென்றலும், பறவைகள், பூச்சிகளின் சப்தமும் வேறு ஒரு உலகிற்கு நம்மை கொண்டுச் செல்லும். இதெல்லாம்விட, இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி தான் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மலைக்குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சியானது, புவியீர்ப்பு விசைக்கு மாறாக, மேல்நோக்கி பாய்கிறது.


latest tamil newsமலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேலெழும்புவதால், நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இங்குள்ள காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கி.மீ ஆகும்.

இது தொடர்பாக எஸ்குவேர் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட பிரத்யேக கட்டுரையில், ‛மலைக்கு அருகில் பெருங்கடல் உள்ளது. கடலில் இருந்து வரும் பலத்த காற்று, மலையின் கீழ்ப்பகுதியில் மோதி, அதே வேகத்தில் மேலே எழுகிறது. இவ்வாறு எழும்போது, காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், நீர்வீழ்ச்சியும் மேல்நோக்கி பாய்கிறது,' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayappan - chennai,இந்தியா
13-ஆக-202021:54:29 IST Report Abuse
Ayappan Science??
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
13-ஆக-202019:32:15 IST Report Abuse
mathimandhiri பின்னோக்கிப் பாயும் அருவி என்பதல்ல. அதிக வேகம் கொண்ட நீர்ச் சுனைகளின் தொகுதி. CLUSTER OF HIGH SPEED SPRINGS. அவ்வளவே. சுனை நீர் அதன் வேகத்தால் மேல் நோக்கி வீசப்ப படுகிறது.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202019:25:56 IST Report Abuse
SAPERE AUDE இது இயற்கையின் மாயாஜாலம். நமது நாட்டில் மஹாராஷ்டிரத்தில் மல்ஸேஜ் காட், அஞ்சனேரி, ஸந்தான் பள்ளத்தாக்கு, நானே காட் என்ற இடங்களில் இம்மாதிரி மேல்நோக்கி பாயும் நீர்விழிச்சிகளை காணலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X