ராஜஸ்தான்: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கெலாட், சச்சின் பங்கேற்பு

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 Congress MLAs, Legislature Party meeting, Ashok Gehlot, Sachin Pilot, congress

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று , முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சச்சின் பைலட் அசோக் கெலாட்டிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


latest tamil news




கடந்த சில தினங்களுக்கு முன் காங். எம்.பி.ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து சச்சின் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து இன்று முதல்வர் அசோக் இல்லத்தில் நடந்த சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றார்.

இந்த நடந்த கூட்டத்தில் வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவது குறித்தும் பெரும்பான்மை நிரூபிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202003:40:00 IST Report Abuse
J.V. Iyer கேவலமான நாடகம் அரங்கேறியது.
Rate this:
Cancel
13-ஆக-202021:34:48 IST Report Abuse
தமிழ் சங்கிகள் முகத்தில் ஒருலோடு கரி பூசப்பட்டது.
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) காங்கிரஸ் mla புத்துணர்ச்சி மையத்திற்கு கூட்டி கொண்டு போவ இப்படி ஒரு ட்ராமா??? கேவலமா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X