பொது செய்தி

இந்தியா

ரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Covid 19 treatment, Zydus Cadila, remdesivir, covid medicine, Coronavirus, Corona, Covid-19,

புதுடில்லி: கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, ரூ.2,800 என குறைந்த விலையில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஜைகோவி-டி என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், மனிதர்கள் மீதான பரிசோதனையின் 2ம் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை, இன்று அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ஹெட்ரோ லேப்ஸ், சிப்லா, மைலான், ஜூப்ளியன்ட் லைப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 5வது நிறுவனமாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


latest tamil newsரெம்டாக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள இந்த மருந்தின், 100 எம்.ஜி., அளவு கொண்ட ஒரு மருந்தின் விலை ரூ.2,800 என நிர்ணயம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மருந்தை, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளில், இம்மருந்து தான் மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-ஆக-202021:47:16 IST Report Abuse
NicoleThomson எதை நம்புவது எதனை நம்பாமல் போவது?
Rate this:
Cancel
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
13-ஆக-202019:40:49 IST Report Abuse
Edwin Remdesivir என்பது ஒரு Antiviral drug. வைரஸ் நோய்களுக்கு எதிராக எந்த antivirus மருந்தும் இதுவரை முழுமையாக செயல்பட்டது இல்லை. நமது அறிவியல் அறிவுபடி வைரஸ் நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் (Vaccines) தான் நோய் வராமல் தடுக்க இயலும் (As prevention, not treatment). தடுப்பூசிகள் இல்லாத பட்சத்தில் இந்த Antivirus drug ஐ "Something is better than nothing" என்ற முறையில் பயன்படுத்தலாம். இந்த மருந்து கம்பெனிகள் தற்போது விலையை குறைத்தது, விரைவில் தடுப்பூசிகள் வெளிவர தயாராக இருப்பதே முக்கிய காரணம் என தோன்றுகிறது.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-ஆக-202019:39:22 IST Report Abuse
S.Baliah Seer ஆணிவேரை விட்டுவிட்டு கிளைகளை வெட்டுவது போன்றதுதான் கொரோன வேக்சின் மற்றும் கொரோனா பாதுகாப்பு மருந்து போன்ற கண்டுபிடிப்புகள்.நாளை பெண்டமிக் என்று இன்னொரு வைரஸைப் பரப்புவார்கள்.அதற்காக மக்கள் வாயை மூடிக்கொண்டு வீடுகளில் தஞ்சம் அடைய வேண்டுமா என்ன?அப்போது அந்த வைரசுக்கு இன்னொரு வேக்சினா?எதிர்காலத்தில் எந்த நாடு வைரஸைப் பரப்புகிறதோ அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஐ .நா சபை இப்போதே போதிய எச்சரிக்கை விடவேண்டும்.சீனா கொரோனா பரவலுக்கு காரணம் என்றால் இதுவரை அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X