ரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்| Zydus Cadila launches India's cheapest remdesivir version at Rs 2,800 per vial | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (5)
Share
Covid 19 treatment, Zydus Cadila, remdesivir, covid medicine, Coronavirus, Corona, Covid-19,

புதுடில்லி: கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, ரூ.2,800 என குறைந்த விலையில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஜைகோவி-டி என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், மனிதர்கள் மீதான பரிசோதனையின் 2ம் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை, இன்று அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ஹெட்ரோ லேப்ஸ், சிப்லா, மைலான், ஜூப்ளியன்ட் லைப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 5வது நிறுவனமாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


latest tamil newsரெம்டாக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள இந்த மருந்தின், 100 எம்.ஜி., அளவு கொண்ட ஒரு மருந்தின் விலை ரூ.2,800 என நிர்ணயம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மருந்தை, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளில், இம்மருந்து தான் மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X