பறவைகளுக்காக தன் காரை விட்டுக் கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் வெளியிட்டுள்ள வீடியோ

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
dubai, prince, car, birds, video,துபாய், இளவரசர், பறவைகள், கார், வீடியோ

துபாய்: தன் காரில் கூடு கட்டிய பறவைக்காக தன் காரையே விட்டுக்கொடுத்துள்ளார் துபாய் பட்டத்து இளவரசர். இவர் பறவைகளிடம் கொண்ட நேசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இளவரசர் வெளியிட்டுள்ள அந்த பறவைகள் வீடியோ வைரலாகி வருகிறது.

துபாய் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் அனைத்து உயரினங்களின் மீதும் அன்பு கொண்டவர். இதற்காகவே தனி இடத்தில் பல விலங்குகளை அன்புடன் பராமரித்து வருகிறார். சமீபத்திய கொரோனா பரவல் காரணமாக இளவரசர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.

அதனால் அவருடைய வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அதில் இளவரசர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ரெ்சிடஸ் காரும் ஒன்று. நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் விட்டதால் அந்த பென்ஸ் காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. பின்னர் அடை காக்க துவங்கியது.

இதை கவனித்த இளவரசர் அந்த காரை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். மேலும், யாரும் காரில் உள்ள பறவை கூட்டை கலைத்துவிடக் கூடாது என்பதற்காக காரைச் சுற்றி சிவப்பு நிற டேப்பை சுற்றி வைத்தார். பணியாளர்களிடம், யாரும் பறவைகளுக்கு தொந்தரவு தரக் கூடாது என்று சொல்லி விட்டார்.


latest tamil newsபறவைக்காக இளவரசர் தன் காரையே எடுக்காமல் விட்ட செய்தி வைரலானது. தற்போது, துபாய் இளவரசர் விட்டுக் கொடுத்த காரில் உள்ள கூட்டில் முட்டை பொறித்து அழகிய குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சு வெளி வந்ததும் தாய்ப்பறவை முட்டை ஓட்டை தூக்கி வெளியே போடுவதையும், தங்களுக்கு கிடைத்த புது உறவை அன்புடன் தாய் பறவையையும், தந்தை பறவையையும் பராமரித்து வரும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து இளவரசர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் தொலைவில் இருந்து பதிவு செய்துள்ளார்.

அவர் தன்னுடைய பதிவில் ஒரு சில நேரங்களில் வாழ்க்கையின் சாதாரண விஷயங்கள் சிறப்பானவையாக மாறி விடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு கோடிக்கும் மேலானவர்கள் இளவரசரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சம் பேர் இந்த வீடியோவை கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
14-ஆக-202004:05:41 IST Report Abuse
SanDan இது ஒரு செய்தியா? பக்ரீத்துக்கு ஆட்டையும், மாட்டையும், ஒட்டகத்தையும், இன்னும் பிற உயிரினங்களையும் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்வதையும் படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் போடச் சொல்லுங்களேன்
Rate this:
Cancel
14-ஆக-202003:41:31 IST Report Abuse
Ganesan Madurai முட்டாத்னமான செய்தி.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஆக-202022:22:40 IST Report Abuse
Nalam Virumbi எல்லா உயிரிடத்தும் கருணை கொண்டால் நல்லதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X