நீண்ட நாட்கள் பதவி வகிக்கும் நான்காவது பிரதமர் மோடி

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
PM Modi, Modi, Atal Bihari Vajpayee, longest-serving PM, non-Congress, Prime Minister, non Congress origin

புதுடில்லி: மத்தியில் காங். அல்லாத பிரதமராக நீண்ட நாள் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2,268 நாட்கள் பிரதமராக இருந்தவர் சாதனையை முறியடித்துள்ளார் பிரதமர் மோடி.

சுதந்திரத்திற்கு பின் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 16 வருடங்கள் 286 நாட்கள் பிரதமராக சாதனை படைத்தார். பின்னர் அவருடைய மகள் இந்திரா 11 வருடங்கள் 59 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார். இந்திராவிற்கு பிறகு மத்தியில் காங். பிரதமராக மன்மோகன்சிங் 2004-2014 வரை 10 ஆண்டுகள் 4 நாட்கள் பிரதமராக இருந்தார்.


latest tamil news

நான்காவது பிரதமர்பின்னர் மத்தியில் 2014-ம் ஆண்டு நடந்த பார்லி. தேர்தலில் பா.ஜ ஆட்சி ஏற்பட்டது. பிரதமராக மோடி 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவியேற்றார். 2019-ல் நடந்த தேர்தலிலும் மீண்டும் பா.ஜ. ஆட்சி மலர்ந்தது. இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்று இதுவரை 6 வருடங்கள் 79 நாட்கள் ஆன நிலையில் வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமராக இருந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட நாள் ஆட்சி செய்யும் நான்காவது பிரதமர் என் பெருமையை மோடி பெற்றுள்ளார்.


3 சாதனைகள்இதனை தவிர சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமிக்கு சென்ற முதல் பிரதமர், கொரோனா ஊரடங்கால் டி.வி. மூலம் மக்களிடம் அதிகம் உரையாடியவர், டுவிட்டரில் 60 மில்லியன் பேரால் பின் தொடர்பவர் என மேலும் மூன்று சாதனைகளை படைத்துள்ளார்.


தங்கள் பதவி காலத்தை முடிக்காத காங்., அல்லாத மற்ற பிரதமர்கள்:


* மொராஜி தேசாய் (மார்ச் 24, 1977 - ஜூலை 28, 1979)
* சரண் சிங் (ஜூலை 28, 1979 - ஜன.,14 1980)
* வி.பி.சிங் (டிச.,2, 1989 - நவ.,10, 1990)
* சந்திரசேகர் (நவ.,10, 1990 - ஜூன் 21, 1991)
* தேவகவுடா (ஜூன் 1, 1996 - ஏப்.,21, 1997)
* குஜ்ரால் (ஏப்.,21, 1997 - மார்ச் 19, 1998)

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202023:49:21 IST Report Abuse
நக்கல் இவர்தான் இந்தியாவின் சிறந்த தலைவராக சரித்திரத்தில் நிற்பார்... இவரைவிட இன்னொரு சிறந்த தலைவர் RSSல் இருந்து மட்டுமே வரமுடியும்...
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
13-ஆக-202023:02:06 IST Report Abuse
vns MODI MODI MODI
Rate this:
Cancel
B.KESAVAN - chennai,இந்தியா
13-ஆக-202022:33:38 IST Report Abuse
B.KESAVAN திரு தமிழ்நேசன் அவர்களின் கூற்று மிகச்சரியானதே, உண்மையான நாட்டுப்பற்றுயுடையவர்கள் முழுவதுமாக திரு மோடி அவர்களை ஆதரிக்கிறார்கள்,இதே உத்வேகத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டால் உலகவல்லரசாக நாம் வருவோம். இவரைக்கொண்டுதான் நாட்டின் பாதுகாப்புக்கான சட்டங்களை கடுமையாக்கி எதிரிநாடுகளின் உறவுக்காரர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X