பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது: எம்.ஜி.எம்., மருத்துவமனை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
SP Balasubrahmanyam , fine, MGM Healthcare, Playback singer

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) உடல்நிலை சீராக உள்ளது என, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவர், சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news


இந்நிலையில், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் இயக்குனர், எஸ்.பி.பி., உடல் நலம் குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லேசான கொரோனா அறிகுறிகளுடன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன், உடலின் சீரான இயக்கத்துக்கு தேவையான அளவு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் திருப்பதி சென்று தரிசனம் செய்ய வரிசையில் சேர்ந்தால் அங்கே கோவிந்தா கோவிந்தா…. கோவிந்தா கோவிந்தா…. நம் உள்ளத்தை அள்ளுவது SPB யின் வாய்சா (குரலா) அந்த வைகுந்த வாசனின் வாய்சா (சக்தியா)?
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-202021:48:16 IST Report Abuse
Tamilan பொது மக்களை சந்திக்கும் , பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. யாராவது வேண்டுமென்றே கொரோனாவை ஏவி விட்டிருக்கவும் வாய்ப்புள்ளது
Rate this:
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
14-ஆக-202004:06:50 IST Report Abuse
SanDanஉண்மை. எனக்கும் அதே டவுட் இருந்தது...
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13-ஆக-202021:43:37 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எல்லாம் வல்ல இறைவன் அருள் பொழிவார். இவரது கலைப்பணி பல்லாண்டு காலம் தொடர வேண்டும். நல்லூர் கந்தன் பற்றி இவர் பாடிய பாடலைக் கேட்டு இரசிக்கும் வாய்ப்பு நேற்றுக் கிடைத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X