எங்களால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்: அசோக் கெலாட்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: 19 எம்.எல்.ஏ.,க்கள் இல்லாமலேயே எங்களால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசியதையடுத்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்து வந்த மோதலில் திருப்பம் ஏற்பட்டது. சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னையை விவாதிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமிக்க சோனியா முடிவு செய்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 14ம் தேதி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் இருவரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், கெலாட்டின் வீட்டில், இன்று மாலை நடந்த எம்.எல்.ஏ., கூட்டத்தில், சச்சின் பைலட்டும் கலந்து கொண்டார். அவரை மகிழ்வுடன் கைகுலுக்கி கெலாட் வரவேற்றார். தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் இருவரின் சஸ்பெண்டை காங்., திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை(ஆக.,14) ராஜஸ்தான் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.


latest tamil news



எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் கெலாட் கூறியதாவது: சட்டசபை கூட்டத்தில் 19 எம்.எல்.ஏ.,க்கள் (சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 பேர்) இல்லாமலேயே எங்களால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால் அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. நாங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202003:40:15 IST Report Abuse
Ganesan Madurai வெட்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருந்தா ஒரு பயலும் இந்த கட்சீல இருக்க மாட்டானே
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஆக-202021:31:12 IST Report Abuse
A.George Alphonse இவர் சொல்லுவது கீழ விழுந்தாலும் மீசையில் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் நகைப்பை வரவைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X