கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
Kerala court frames,charges,ex-Bishop Franco Mulakkal ,nun rape case

புதுடில்லி: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிஷப் மீது ஐகோர்ட் குற்றச்சாட்டினை பதிவு செய்தது.

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. பின், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள தேவாலயத்தின் பிஷப்பாக, இடமாற்றம் செய்யப்பட்டார். குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


latest tamil news
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கோட்டையம் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.

ஜாமினிலிருந்த போதிலும் கோர்ட் உத்தரவுப்படி சரணடையாமல் இருந்த நிலையில், இன்று கோட்டயம் கோர்ட்டில் சரணடைந்தார். இந்நிலையில் பிஷப் மீது இன்று கோர்ட் கோட்டையம் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
14-ஆக-202015:51:17 IST Report Abuse
mathimandhiri அருள் பொங்கும் கனிவான முகம், புன்னகையையே அணிகலனாகக் கொண்ட பார்வை, இறைப்பணிக் கென்றே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, துறவு பூண்ட தூய உள்ளம், சேவை ஒன்றே செய்து செய்து சலிப்படையா நெஞ்சம், அதன் விளைவாகத் தோன்றும் ஒரு தெய்வக்களை, சகிப்புணர்வு ,பாவப் பட்டவர்களை அடைக்கலம் அளித்து அரவணைத்துக் கரை சேர்க்கும் புனிதப் பணி, அதிலேயே வாழ்க்கையிக் கருத்துக் கொண்ட பரந்த மனம், பரம் பொருளின் பிரதிநிதி, என்று கொண்டாடத் தோன்றும் இந்தப் புனிதரா நீதி மன்றப் படி ஏறி இறங்குகிறார்? கொடுமை, கொடுமை, இது காலம் செய்யும் சதி. அன்றி வேறென்ன ?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
14-ஆக-202010:55:57 IST Report Abuse
Anand இவனை தூக்கில் போடுவார்களா, இல்லையா?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
14-ஆக-202010:26:35 IST Report Abuse
தமிழ்வேள் நல்ல காலம் [இயேசுவுக்கு ] அவர் இன்று உயிரோடு இல்லை ..இருந்திருந்தால் அவரையும் ...............நல்ல மதம் ..நல்ல திருச்சபை ....அல்லேலூயா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X