பொது செய்தி

இந்தியா

மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
India,Pakistan,இந்தியா,பாகிஸ்தான்

புதுடில்லி: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

காஷ்மீரை சேர்ந்த, 1,600 மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கூறியிருந்தார். காஷ்மீரிலிருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு படிப்பதற்காக செல்பவர்கள், அங்கு பயங்கரவாத முகாம்களின் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன.


latest tamil news


இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சில் புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அனைத்து பகுதிகளும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் எனவும், பாக்., ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
14-ஆக-202011:28:12 IST Report Abuse
Madhusoodhana Ramachandran மோடி அவர்கள் சரியான ராஜ தந்திரி.நேர்மையாகவும் இந்தியா நாட்டை காப்பதற்குமுரிய எல்லா நடவடிக்கையும் துணிவுடனும் எடுக்கிறார். வாழ்க பாரதம்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
14-ஆக-202011:04:28 IST Report Abuse
Indian  Ravichandran அங்கே மருத்துவம் மட்டும் சொல்லிக்கொடுக்கப்படமாட்டாது தாராளமாக தீவிர வாத கருத்துக்களும் சொல்லிக்கொடுக்கப்படும் அபாயம் உண்டு. தடை போட்டது சரியே.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
14-ஆக-202010:55:14 IST Report Abuse
Anand சபாஷ், மிகச்சரியான நடவடிக்கை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X