பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்தில் காயம் அடைந்த 92 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
kozhikode accident, flight, 92 persons, injured, discharged, கோழிக்கோடு, விமான விபத்து, 92 பேர், டிஸ்சார்ஜ், காயமடைந்தவர்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி காயம் அடைந்த 92 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஆக.,7 வெள்ளிக்கிழமை இரவு, துபாயில் இருந்து 190 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். காயம் அடைந்தவர்களில் 85 பேர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மீதி 7 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் 298 உடமைகள் சம்பவ இடத்திலிருந்து மீட்க்ப்பட்டுள்ளன.


latest tamil news



இதனிடையே விமான பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்திப்பதற்கு ஏர் இந்தியாவின் 2 விமானிகள் சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
14-ஆக-202007:51:00 IST Report Abuse
Balasubramanian Ramanathan கடவுள் எங்கே என்று கேட்பவர்களுக்கு விடை கிடைத்ததிருக்கும் என நம்புகிறேன்.
Rate this:
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
14-ஆக-202003:34:04 IST Report Abuse
Indhiyan மீண்டு வீட்டுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X