கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மதுக்கடையை மூட வழக்கு

Added : ஆக 14, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூரில், டாஸ்மாக் மதுக்கடையை மூட கோரிய மனுதாரரை, கலெக்டரை அணுகும்படி, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஆயிமாபுதூர் ஜெயபாலன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடர்ந்த வழக்கில், 'அன்னூர் குளத்தின் மேற்கு கரையை ஒட்டி, டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
கடைக்கு அருகில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், விநாயகர் கோவிலும் உள்ளன.இந்த கடைக்கு வருவோர், குளத்தில் பாட்டில்களை வீசுவதால், விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும்' என, கோரி இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா பிறப்பித்த உத்தரவில், 'இது குறித்து புகார்தாரர், கோவை கலெக்டரை அணுக வேண்டும். அவர் அணுகும் பட்சத்தில், 4 வாரங்களுக்குள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X