கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காவல்படை வீரருக்கு கத்திகுத்து:இளைஞருக்கு  ஐந்தாண்டு சிறை

Added : ஆக 14, 2020
Share
Advertisement
 காவல்படை வீரருக்கு கத்திகுத்து:இளைஞருக்கு  ஐந்தாண்டு சிறை

திருப்பூர்:திருப்பூரில், இளைஞர் காவல் படை வீரரை கத்தியால் குத்தியவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் காவல்படை வீரராக ஜெகதீஸ் கண்ணன், பணிபுரிந்து வந்தார். கடந்த, 2014 ஜூன், 26ல், அவர் பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த தஞ்சையை சேர்ந்த கதிரேசன், 31, என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், கதிரேசன் தன்னிடமிருந்த கத்தியால், ஜெகதீஷ் கண்ணனை சரமாரியாக குத்தினார்.அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அவரை பிடித்து தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் ஜோதி ரங்கசாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, கதிரேசனுக்கு, ஐந்தாண்டு கடுங்காவல் சிறை மற்றும், 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X