கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
ரவுடிகள், கட்சிகள், அரசியல், தூய்மை, ஐகோர்ட், நீதிபதிகள்

சென்னை : 'கட்சிகளில் ரவுடிகளை சேர்ப்பது; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். அதை எதிர்த்து அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'ஜனாவுக்கு எதிராக மூன்று கொலை வழக்கு கொலை முயற்சி வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் 'அரசியல் பின்னணியுடன் குற்றவாளிகள் வலம் வருகின்றனர். குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும். புலன் விசாரணையை முடிக்காமல் 11 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்' என எச்சரித்தனர்.


latest tamil news


இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி ''ஜனா மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரவுடி கும்பலின் தலைவராக இருந்துள்ளார்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன; அவர்கள் மீது எத்தனை வழக்குகள்; அவற்றின் நிலை என்ன; பிறழ்சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகின்றனரா; 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்; ரவுடிக் கும்பலை ஒடுக்க ஏன் தனிச் சட்டம் அமல்படுத்தக் கூடாது.

அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதில் அளிக்க வேண்டும்.நாடு முழுவதும் ரவுடி கும்பல்கள் எத்தனை உள்ளன; குற்றப் பின்னணி உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்; அரசியல் பின்னணியில் உலா வரும் ரவுடி கும்பல் எத்தனை ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியலில் ரவுடிகள் நுழைவதன் வாயிலாக கொள்கையை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. தேர்தலில் போட்டியிட இவர்களுக்கு இடம் கொடுப்பதையும் கட்சிகளில் சேர்ப்பதையும் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை துாய்மைப்படுத்த முடியும்.

அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக குற்றவாளிகள் இருக்கக் கூடாது. அவர்கள் அரசியலில் நுழைந்து எம்.பி. - எம்.எல்.ஏ. அமைச்சர் என பதவிக்கு வருவது பொது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கும்.இப்படி எல்லாம் இருந்தால் தான் பதவிக்கு வர முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
14-ஆக-202011:45:45 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அம்பேத்கர் அவர்கள் வகுத்த சட்டம் நமது அரசியல் சட்டம் அதில் ஓட்டை இருப்பது அவருக்கே அவமானம் மாற்றப்பட வேண்டும்
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
14-ஆக-202010:44:43 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஒரு கட்சியில் தலைவன் தொடங்கி கடைசி அடிமட்ட தொண்டன் வரைக்கும் ரௌடிகளா இருந்தா என்ன செய்வது ? அரசியல் கட்சிகள் ரௌடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்க்கலாம். இல்லையெனில் தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து அந்த அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்போது நீதிமன்றங்கள் தலையிடாமல் இருக்குமா ?
Rate this:
Cancel
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
14-ஆக-202009:10:08 IST Report Abuse
கொக்கி குமாரு ஜட்ஜ் அய்யா, ரௌடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்க்கலாம், ஆனா, ஒரு கட்சியில் தலைவன் தொடங்கி கடைசி அடிமட்ட தொண்டன் வரைக்கும் எல்லா பயலுகளும் ரௌடிகளா இருந்தா என்ன செய்வது அய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X