பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 8,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 8,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.21 லட்சமாக உள்ளது. மாநில அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 59.60 சதவீதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 6,706 பேருக்கு கொரோனா தொற்று .உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 2,03,200 ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 103 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 3,613 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55,999 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கர்நாடகாவில் மொத்தம் 18,82,316 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூருவில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா புதன் கிழமை கொரோனாவிலிருந்து குணமாகி உள்ளார். அவருக்கு இரண்டாவதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X