ஸ்வப்னா ஜாமின் மனு: தள்ளுபடி செய்தது கேரள நீதிமன்றம்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Kerala gold smuggling case, gold smuggling, swapna suresh,
ஸ்வப்னா ஜாமின் மனு: நிராகரித்தது கேரள நீதிமன்றம்

கொச்சி,: கேரள தங்க கடத்தல் வழக்கின், முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரின் ஜாமின் மனுவை, கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத் தின் பெயருக்கு, துபாயில் இருந்து வந்த பார்சலில், 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.


நேற்று விசாரணை




latest tamil news




இந்த விவகாரத்தில், ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, என்.ஐ.ஏ., நீதிமன்றம், கடந்த, 10ல் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், குற்ற வாளிகள் ஸ்வப்னா உள்ளிட்டோர் தரப்பில், கொச்சியில் உள்ள, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நேற்று விசார ணைக்கு வந்தது. உத்தரவிட்டதுஅப்போது, 'திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் மற்றும் கேரள அரசில், ஸ்வப்னா சுரேஷ் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தது, விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

'எனவே, அவரை ஜாமினில் வெளியே விட்டால், அது வழக்கு விசாரணையில் தொய்வை ஏற்படுத்தும்' என கூறிய நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மற்றொரு குற்றவாளியான, சயீத் அலாவி என்பவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகளை செய்து தருமாறு, சிறைத் துறை கண்காணிப்பாளருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-202017:01:32 IST Report Abuse
Endrum Indian ஏன் ஒரு மீடியாவில் இவள் ஒரிஜினல் பேர் வருவதில்லை. ஸ்வப்னா சுரேஷ் என்று ஏன் வரவேண்டும்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-ஆக-202015:41:21 IST Report Abuse
elakkumanan ஒழுங்கா படிக்காம, சட்டப்படி திருடாமல், இஷ்டப்படி திருடினால் இப்பிடித்தான்...எங்க ஊரில் பாருங்க... எம்பூட்டு ரெபெரென்ஸ் இருக்கு... ஒங்களுக்கு ஈகோ.. எல்லாம் தெரியும் னு நெனைச்சு மாட்டிக்கிட்டிங்க.. குரு பக்தி வேண்டும்.. சிவகங்கை, தென் சென்னை, வட சென்னை, நீலகிரி, தூத்துக்குடி, மத்திய சென்னை, சேப்பாக்கம், ...அவ்வளவு ஏன், எங்க மாநிலமே ஒரு ரெபெரென்ஸ் மாநிலம்.. இப்பயும் ஒன்னும் மோசமில்லை. எங்க தலையை கேளுங்க.. சட்ட அணியின் உதவியை பெற்று வெடி மேல தாளம் முழங்க வெளிய வரலாம்.. அம்னீசியா பாதிச்சு, பழசெல்லாம் (அந்த குறிப்பிட்ட தேதிகளில் மட்டும்) மறந்து போச்சு னு மருத்துவ சான்றிதழை கொடுங்க.. இல்லைனா, ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு மருத்துவர் கிட்டதான் நான் மருத்துவம் பார்ப்பேன் னு சொன்னா, நம்ம கோர்ட் கேக்கும்.. வெளிய வந்த ஒடனே, நீதி துறையை காப்பாத்த நீங்களே ஒரு பெரிய போராட்டம் நடத்தலாம்...தெனம், டிவி யில் பேட்டி தரலாம்.. எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்.. அப்பொறம் உங்க இஷ்டம்.....
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
14-ஆக-202011:13:46 IST Report Abuse
Sri Ra அன்னான் பீனாயி காப்பாத்த வருவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X