பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன?

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
நம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன?

தமிழக நலன்களைப் பாதுகாக்க, எத்தனையோ விஷயங்களுக்குக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் சூழ்நிலையில், 'ஹிந்தி தெரியாதா' எனக் கேட்டதை பெரிய விஷயமாக்கி, அரசியல் செய்வதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீது, தமிழக மக்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.அ.தி.மு.க., கோட்டையாகக் கருதப்படும், கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியே முழுமையாக வெற்றி பெற்றது. தமிழகம் முழுதும், 38 தொகுதிகளில், அந்தக் கூட்டணியை, மக்கள் அமோக வெற்றி பெற வைத்தனர்.


நதி நீர் பிரச்னையில் மவுனம்நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு, இந்த எம்.பி.,க்கள் செய்தது என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழகத்துக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம், சிறுவாணி அணையை துார் வாருவது, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் திட்டம், அச்சன்கோவில் - பம்பா நதி - வைப்பாறு இணைப்புத் திட்டம், வாளையார் பாசனத் திட்டம், கல்லாறு அணைத் திட்டம் என, ஏராளமான நதி நீர் பிரச்னைகள் உள்ளன.இவற்றுக்கு, அங்கு மாறி மாறி ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகள் தான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.குறிப்பாக, கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையை துார்வார விடாமல், கேரளா அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.


latest tamil newsமேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை, தமிழக அரசால் கட்டப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த அணையில், கடந்த, 7ம் தேதி, 30 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அன்று ஒரே நாளில், 36 செ.மீ., மழை பெய்ததும், பாதுகாப்பு காரணங்களை கூறி, இரு நாட்களில், 12 அடி தண்ணீரை கேரளா வெளியேற்றியது. கடந்த, 2017ல் கடும் வறட்சி ஏற்பட்டு, சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க வேண்டிய நிலை உருவானது. அப்போது, 'ஆழியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வழங்கினால் மட்டுமே, கோவைக்கு சிறுவாணியில் இருந்து தண்ணீர் தர முடியும்' என, கேரள கம்யூ., அரசு நிபந்தனை விதித்து, தமிழகத்துக்கு நெருக்கடி கொடுத்தது. இதேபோல, 1.50 லட்சம் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் விடாமல், கேரளா அரசு கடிவாளம் போட்டுக் கொண்டே இருக்கிறது.


விமான நிலையம்கோவை விமான நிலையத்துக்கு, சர்வதேச விமானங்களை வரவிடாமல் தடுப்பதிலும், கேரளா அரசின் லாபி மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம், மலை மீது அமைந்துள்ள, 'டேபிள்டாப்' ஓடுதளமாக இருப்பதால், விமானங்கள் தரை இறங்கும்போது பல முறை விபத்துகள் நடந்துள்ளன.கடந்த வாரம் கூட, 18 பேர் உயிரிழந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தை விட அதிக பாதுகாப்பும், 500 அடி நீளமும் கொண்டது, கோவை விமான நிலையத்தின் ஓடுதளம்.ஆனால், இங்கிருந்து சர்வதேச விமானங்களை இயக்க விடாமல், கேரளா அரசும், அங்குள்ள லாபியும் தொடர்ந்து வேலை செய்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கொச்சி விமான நிலையம் கடும் மழையால் மூடப்பட்ட போதும், கோவையில் சர்வதேச விமானங்களை இறங்க விடாமல், கோழிக்கோடு விமான நிலையத்தில் இறங்குவதற்கு கேரளா அரசு ஏற்பாடு செய்தது.இப்போது, கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னும், கோவை விமான நிலையத்துக்கு, சர்வதேச விமானங்களை திருப்ப விடாமல், கேரளாவின் இடதுசாரி அரசு தொடர்ந்து உள்ளடி வேலை செய்கிறது. இவற்றை கேள்வி கேட்க வேண்டிய கோவை, எம்.பி., நடராஜன், அதே கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், வாயே திறக்காமல் இருக்கிறார்.கம்யூ., கட்சியுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்துக்காக, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணியில் உள்ள பிற கட்சி எம்.பி.,க்களும், இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.


பிரசாந்த் கிஷோர் யார்?மக்கள் பிரச்னைகள் இத்தனை இருக்கும் நிலையில், ஹிந்தி மட்டுமே பேசத் தெரிந்த, மத்திய தொழில் பாதுகாப்புப் படை - சி.ஐ.எஸ்.எப்., பெண் போலீஸ் ஒருவர், தி.மு.க., -- எம்.பி., கனிமொழியிடம், 'உங்களுக்கு ஹிந்தி தெரியாதா' எனக் கேட்டதை, முக்கியப் பிரச்னையாக மாற்றியுள்ளனர்.தி.மு.க.,வுக்கு தற்போது பிரதான ஆலோசகராக விளங்கும், பிரசாந்த் கிஷோர் மற்றும் அவருடைய, 'ஐபேக்' நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுபவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு பல நுாறு கோடி ரூபாய், ஊதியமாக, தி.மு.க., தலைமையால் தரப்படுகிறது.

ஆனால், கீழ்நிலையில் பணியாற்றும் ஹிந்தி மட்டுமே தெரிந்த ஒரு பெண் போலீசின் கேள்வி, பெரிய குற்றம் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.'மிக முக்கியமான பிரச்னைகளில் மவுனமாக இருந்துவிட்டு, இதுபோன்ற அற்ப பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்குவது மலிவான அரசியல்' என, சமூக ஊடகங்களில், இளைய தலைமுறையினர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.இதை, தி.மு.க. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் மாற்றிக் கொள்ளாவிட்டால், இளையோரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நிச்சயம். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஆக-202008:44:24 IST Report Abuse
 Muruga Vel நம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன? படத்தை பாத்தாலே புரியுமே ..
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
14-ஆக-202016:50:45 IST Report Abuse
venkatan நம் சனநாயகத்தில் எம்.பி,எம்.எல்.ஏ என்றால் யார் அவரது கடமை,பொறுப்பு மற்றும்மக்களின் உரிமைகள் என்னென்ன என்பது குறித்து திருவாளர் பொதுசனதுக்கு எத்தனை.பேருக்கு தெரியும்? கிராம மட்டத்தில் மக்களுக்கு ஒருவாரகாலம் செய்தி விளம்பர த் துறை வகுப்பு எடுக்கவேண்டும். பலர் அவர் அதிகாரிபோலவும் தன எஜமானர் அவர்தான் என்ற நினைப்பும் போகவேண்டும். இன்னும்சிலர். பேச்சு, போதை, பணம், உணவு, மிரட்டல் போன்றவற்றால் மக்கள் பிரதி நிதி ஆகிவிடுகின்றனர். அப்புறம் என்ன படா டோபம் டாம்பீகம். ராஜபட்டைதான்.. இதில் பல ஜமீன்தார்,தரிணிகளும் உண்டு.
Rate this:
Cancel
INDIAN - madurai,இந்தியா
14-ஆக-202016:35:57 IST Report Abuse
INDIAN இவர்கள் அனைவருக்கும் நீட் எக்ஸாம் வைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X