சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

வயதானால் வேலைக்கு வரக்கூடாதா?

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 காமராஜ் , ராஜேந்திர பாலாஜி, உதயகுமார்,பாலகிருஷ்ணன் ,சண்முகம்

'65 வயதுக்கு மேல் இருப்போர் வேலைக்கு செல்லக்கூடாது' என, மஹாராஷ்டிரா அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனக்கு, 78 வயதாகிறது. என் வேலைகளுக்கு, மூடுவிழா என்றே நினைக்கிறேன். எனினும், திரைப்பட அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஒருவேளை நீதிமன்றத்தில் வயது வரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், எனக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


'தமிழகத்தில், 55 வயது போலீசாரை, பணிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டனர். அதை தட்டிக் கேட்க கூட இங்கு ஆளில்லை...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிக்கை.தமிழகத்தில், கொரோனா தொற்றாளர்கள் குணமடைவதில், திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது; தொற்று பாதிக்கப்பட்டோரில், 86.28 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். பிற மாவட்டங்களிலும் தொற்று குறையும்.


'அடடா, அ.தி.மு.க., அரசு, கொரோனா ஒழிப்பிலும் சாதனை படைக்கிறதே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.தமிழகத்தில், புதிதாக ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு, உலக வெப்பமயமாக்குதல் தடுக்கப்படுகிறது. மரக்கன்றுகளை நடுவதோடு நின்று விடாமல், அவற்றை பராமரிப்பதிலும், எங்கள் அரசு சிறப்பாக செயலாற்றுகிறது.


latest tamil news

'உங்கள் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று; பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்..' என, கிண்டலாக சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.முதல்வர், இ.பி.எஸ்., எளிமையின் அடையாளமாக விளங்குகிறார். அதே நேரத்தில், வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். அ.தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருப்பதால், மக்களிடம் வரவேற்பு உள்ளது.


'உங்களைப் போன்ற, இ.பி.எஸ்., புகழ்பாடும் அமைச்சர் யாரும் இருக்க முடியாது...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என, இப்போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை, 1989ல், தி.மு.க., ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவுடன், சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இப்போதைய தீர்ப்பையும், மார்க்சிஸ்ட் மனதார வரவேற்கிறது.


'அப்போ, கருணாநிதி போல, நீங்களும், தீர்க்கத்தரிசனம் கொண்டவர்கள் என்று சொல்லுங்கள்...' என, கிண்டலாக சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.பொது போக்குவரத்தை துவக்கினால், கொரோனா தொற்று பரவிவிடும் என்கிறது, தமிழக அரசு. டாஸ்மாக் கடைகளில், ஆட்டோக்களில், கார்களில், தனியார் போக்குவரத்து வாகனங்களில் எங்கே சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டும்.


'ஆமாம். நீங்கள் கேட்பது சரி தான்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தொ.மு.ச., பேரவை பொதுச் செயலர் சண்முகம் எம்.பி., அறிக்கை.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஆக-202016:51:59 IST Report Abuse
S. Narayanan இவருக்கு எதற்கு வேலை.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
14-ஆக-202018:01:43 IST Report Abuse
Balajiஅது அவர் இஷ்டம். ஒங்களுக்கு என்ன?...
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
14-ஆக-202013:40:44 IST Report Abuse
Shroog லட்சம் கோடிகள் உள்ள இவருக்கு வீட்டில் இருக்க முடியாதா? அதுவும் இவருக்கு corona வந்து உள்ளது. திரும்ப வர வாய்ப்புள்ளது. இவருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தாலும், இவரின் அருகில் இருப்பவர்களுக்கு corona வர வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் பலர் உணவுக்கு வழி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள். இவருக்கு நடிக்க போகணுமாம். இந்தியாவில் என்றைக்கு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோமோ, அன்றைக்குத்தான் முன்னேற்றத்தை பார்க்கலாம். இவருக்க அரசு பென்ஷன் வேற....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
14-ஆக-202015:20:51 IST Report Abuse
Balajiஎந்த கோவேர்ந்மேன்ட் பா இவருக்கு பிஞ்சின் தருது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X