பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Brazil, ED, Bank Accounts, bank Fraud, embezzlement fraud, பிரேசில், நிதி முறைகேடு, வங்கி கணக்கு, முடக்கம், இந்தியர்கள்

புதுடில்லி: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த நிதி முறைகேட்டில் தொடர்புடையதாக கருதப்படும், 67 இந்தியர்களின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக, அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும், ஹாமில்டன் ஹவுஸ்வேர் (பி) லிட்., என்ற நிறுவனத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கை, அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. அமலாக்கத் துறையின் அனுமதியின்றி, இந்த கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news



கோரிக்கை


இந்த மனு, விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது: பிரேசில் நாட்டின் மாகாண கவர்னர் ஒருவர், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்து, அந்த நாட்டின் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அவருடன் நிதி தொடர்பு வைத்திருந்த, பல்வேறு நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை, பிரேசில் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பிரேசிலில் மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, இதில் தொடர்பிருப்பதாகவும், அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என்றும், பிரேசில் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


பரஸ்பரம்


நம் நாட்டை சேர்ந்த, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின், 67 வங்கி கணக்குகளை முடக்கி வைக்கும்படி, பிரேசிலின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுபோன்ற வழக்குகளில், பரஸ்பரம் உதவுவதற்காக, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.எனவே, 67 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-ஆக-202015:29:08 IST Report Abuse
elakkumanan திருட்டு கட்சியின் கிளை இருக்கு போல பிரேசிலில்.....................ஆனால், மாடமாட்டானுவளே திருட்டு கட்சி.......அப்பரசண்டிஸ் ஆ இருப்பனுவோ போல....................பாடங்களை ஒழுங்கா படிக்கணும்.............முன்மாதிரிகளை வாழ்க்கை பாடங்களா நெனைச்சு படிக்கணும்.........வெளி நாடு கார் வரி ஏய்ப்பு செஞ்சு வாங்கீட்டு , மாட்டுனஒடனே , வரியை கட்டிட்டு , மன்னாப்பு கடுதாசி கொடுத்துட்டு, வீடு வாசலில் வந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையை பறிப்பதாக பேட்டி கொடுத்தான் பாரு அவன் தலைவன்................நீங்க ஒரு சின்ன விஷத்தை கூட ஒழுங்கா முடிக்க முடியல............உலகின் அத்துணை விதமான திருட்டுத்தனத்துக்கும் ரெபெரென்ஸ் மேட்டர் தலை கொடுத்திருக்கார்.............ஒழுங்கா படிக்காம மாட்டிக்கிட்டா, அசிங்கமா இல்லையா..................சும்மா ஏர்போர்ட்டில் இந்தியில் (அந்த ஊழியருக்கு தெரிந்த மொழி , அவ்வளவுதான் ) பேசுனத்துக்கு , ரெண்டு நாளா தெருவையே நாரா விட்டோம்ல.....ரஜினி அவர்கள் துக்ளக் விழாவில் பேசுனப்போகூட, எப்புடி டீல் பண்ணுனோம்.........நெனைச்சு பாருங்க.....ராமர் சிலையை செருப்பால் அடிக்கலைனு சொன்னோம்............அது வெறும் படம்தான் சொன்னோம்...அப்போ ரஜினி சிலை னு சொன்னது பொய் னு சொன்னோம் பாரு, அது நெத்தியடி....அப்பொறம், அந்த செருப்பு கூட்டத்திலே இருந்து யாரோ ஒரு ஓசி சோறு வண்டியில் (முன்னணியில் )இருந்த ஓசி சோறுக்காக வீசுனது னு சொன்னோம்..............அப்பொறம், அப்படியே ஊத்தி மூடிட்டோம் ல...........அதே மாதிரி, நிதி மோசடியெல்லாம், கணக்கில் நான் பெயிலு ........சொல்லணும்...........எங்க கணக்கு வாத்தி தப்பா சொல்லிகொடுத்திட்டாரு னு சொல்லணும்..............கணக்கு ஒழுங்கா எழுதுன பேப்பரை கரையான் தின்னுடுச்சுன்னு சொல்லணும்...........இல்லைனா, புத்திசாலித்தனமா , இந்த மாதிரி வழக்கு வருவது தெரிந்து , (எல்லா லெவலில் ஆளு இருக்கணும் , நாங்க ஒரு ராசாங்க நிதி மந்திரி னு ஒருத்தரை வச்சு எத்தனை விசயத்தைஊத்தி மூடினோம், சிவகங்கை ஆளு இல்லை, ஞாபகப்படுத்தி பாருங்க ) அந்த கரையான்கள் மேல ஒரு டுமீல் காவல் நிலையத்தில் ஒரு கேஸை போட்டு வாசிக்கணும்....சட்டப்படிதான் எல்லாமே செய்யணும்..............பதினஞ்சு கம்பனி மாறி மாறி வந்த கமிஷன் காசை வச்சு டிவி ஆரபிச்சோம்ல.....மாட்ட போறோம்னு தெரிஞ்ச ஒடனே, ஒரே செக்கில் செட்டில் பண்ணி தப்பிச்சோ பாத்தியா..............அவன் தலைவன்...இப்போ, கேசு என்ன ஆச்சு..................ஸிரோ லாஸ்.........................எல்லாமே ரெபெரென்ஸ் இருக்கு..............ஒழுங்கா படிங்க...............ஒழுங்கா நாலு காசு சம்பாரிங்க....இன மானம் காப்போம்......................வெறும் ஒன்பதாயிரம் கோடிக்கு மல்லையா நாட்டை விட்டே ஓடிபோய்ட்டாரு.................சரியான வாத்தியாரிடம் சரியான பாடத்தை சரியா படிக்கணும்.............இல்லைனா, இப்பிடித்தான்....உங்களை மாதிரி..................பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க ப்பா....
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
14-ஆக-202011:11:37 IST Report Abuse
Sri Ra ஒரு நாட்டை விட்டு வைக்கமாட்டாங்க
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஆக-202010:59:27 IST Report Abuse
J.Isaac இந்தியாவில் மட்டும் அன்றி வெளிநாடுகளிலும் நம்மவர் புகழ் பெற்று விழங்குகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X